Health | உடல்நலம்
“வள்ளலார் சொன்ன மூலிகை கரிசலாங்கண்ணி..!” – இத்தனை நன்மைகளா?
பல வகையான கீரைகள் இருக்கும் போது நாம் அரைக்கீரை, தண்டங்கீரை மட்டுமே உணவில் சேர்த்து வருகிறோம். இன்னும் சில அகத்திக்கீரை, முருங்கை கீரை போன்றவற்றையும் சேர்த்து வருகிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் எண்ணற்ற கீரைகளை உணவில் சேர்த்துக் கொண்டு இன்றும் வஜ்ரம் போல் தங்கள் உடலை பாதுகாத்து வருகிறார்கள் அந்த வரிசையில் தெய்வீக மூலிகை என்று வள்ளலாரால் அடையாளம் காட்டப்பட்ட கரிசலாங்கண்ணி பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கீரைகளிலேயே பல சத்துக்களை கொண்டிருக்கும் இந்த கரிசலாங்கண்ணி மருத்துவ குணம் அதிக அளவு கொண்டது. மேலும் இந்தக் கீரையை வெண் கரிசாலை என்றும் பலர் அழைப்பார்கள். அப்படிப்பட்ட எந்த மூலிகைகளின் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
கரிசலாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்
👍கரிசலாங்கண்ணி கீரை அரைத்து அப்படியே உங்களின் மீது தடவி வர உங்கள் புண்கள் விரைவாக குணமாகும்.
👍கரிசலாங்கண்ணியோடு, தும்பை, கீழாநெல்லி இலைகளை அரைத்து கசாயமாக குடித்து வரும்போது அடிபோஸ் திசுக்கள் என்று சொல்லக்கூடிய அடிவயிற்றில் இருக்கும் கொழுப்பு கரைந்து விடும்.
👍கன்னி கீரைக்கு புற்றுநோய் செல்களை வளர விடாமல் அழிக்கக்கூடிய ஆற்றல் அதிகம் உள்ளதால் இதனை நீங்கள் எடுத்துக் கொள்வதின் மூலம் புற்று நோயை தடுத்து விடலாம்.
👍 கரிசலாங்கண்ணி சாருக்கு ரத்தத்தை சுத்திகரிக்க கூடிய சக்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ரத்த நாளங்களில் கொழுப்பால் ஏற்படுகின்ற அடைப்பை நீக்கும்.
👍உடலில் ஏற்படுகின்ற சுருக்கங்கள் அதுவும் குறிப்பாக முகங்கள் மற்றும் சருமங்களில் ஏற்படுகின்ற சுருக்கங்களை நீக்கி முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள இந்த இலை சாறு உதவி செய்கிறது.
👍 கரிசலாங்கண்ணி பொடியோடு திப்பிலி பொடியையும் சேர்த்து 48 நாட்கள் நீங்கள் உண்பதின் மூலம் உங்களுக்கு சுவாச பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமா நோய்களிலிருந்து விடுதலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
👍 கூந்தல் வளர்ச்சிக்கு இந்த கீரையின் எண்ணெய் உதவி செய்வதால் பெண்கள் தங்கள் கூந்தல் பளபளப்பாகவும், முடி உதிர்வதில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் கரிசலாங்கண்ணி கீரையை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தேய்ப்பது மூலம் நன்மைகள் பெறலாம்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!