Connect with us

“அற்புதங்களை நிகழ்த்தும் நத்தைச்சூரி..!” – மூலிகையின் பயன்கள் பற்றி பார்க்கலாமா?

Benifits and uses of Nathai Soori, Nathai Soori, Reduce Fat, ஊளைச்சதை குறையும், நத்தைச்சூரி, நத்தைச்சூரி  நன்மைகள்

Health | உடல்நலம்

“அற்புதங்களை நிகழ்த்தும் நத்தைச்சூரி..!” – மூலிகையின் பயன்கள் பற்றி பார்க்கலாமா?

சித்த மருத்துவத்தில் அதிக அளவு பயன்படக்கூடிய அற்புத மூலிகைதான் இந்த நத்தை சூரி. இதன் வேர், இலை, விதை போன்றவை ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. பூண்டு வகையை சேர்ந்த தாவரமான இது மனிதர்களுக்கு மகத்தான நன்மைகளை செய்கிறது.

Benifits and uses of Nathai Soori, Nathai Soori, Reduce Fat, ஊளைச்சதை குறையும், நத்தைச்சூரி, நத்தைச்சூரி  நன்மைகள்

இன்றும் பெரும்பாலான கிராமங்களில் அதிக அளவு இந்த மூலிகை செடி வேலிகளில் வளர்ந்து கிடக்கும். அப்படிப்பட்ட இந்த மூலிகை நத்தைச்சூரி மனிதர்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நத்தைச்சூரி  நன்மைகள்

நத்தைச்சூரி மூலிகையில் இருக்கும் விதையை பொடியாக்கி பாலில் கலந்து நீங்கள் குடிப்பதின் மூலம் உங்கள் உடல் ஏற்படக்கூடிய வெப்பநிலை குறைந்து உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

Benifits and uses of Nathai Soori, Nathai Soori, Reduce Fat, ஊளைச்சதை குறையும், நத்தைச்சூரி, நத்தைச்சூரி  நன்மைகள்

நத்தைச்சூரியின் விதையை பொடியாக்கி அதை நீங்கள் சூடு தண்ணீரில் கலக்கி குடித்து வந்தீர்கள் என்றால் உங்கள் உடலில் இருக்கக்கூடிய ஊளைச்சதை அப்படியே குறையும். எனவே எடை குறைப்பில் முக்கிய பங்கு எந்த நத்தைச்சூரி செய்கிறது.

இதே மூலிகையின் பொடியை தேனில் குழைத்து நீங்கள் சாப்பிட்டு வந்தால் வயல் சம்பந்தமான உபாதைகள் மற்றும் சீதபேதி போன்றவை எளிதில் அகலும்.

Benifits and uses of Nathai Soori, Nathai Soori, Reduce Fat, ஊளைச்சதை குறையும், நத்தைச்சூரி, நத்தைச்சூரி  நன்மைகள்

நத்தைச்சூரியின் வேரை பொடியாக்கி பாலில் கலந்து கொடுத்தால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.எனவே பால் சுரப்பு கம்மியாக உள்ள பெண்களுக்கு இது பக்கவிளைவுகள் இல்லாத அற்புதமான மருந்தாகும். அதுமட்டுமல்லாமல் சிறுநீரகத்தில் கல் இருந்தால் அந்த கற்களை கரைத்து எடுத்து வெளியே கொண்டு வரக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது.

Benifits and uses of Nathai Soori, Nathai Soori, Reduce Fat, ஊளைச்சதை குறையும், நத்தைச்சூரி, நத்தைச்சூரி  நன்மைகள்

ஆண்மை அதிகரிக்க நத்தைச்சூரியின் சூரணத்தை நெல்லிக்காய் அளவு எடுத்து பால் கலந்து குடித்தால் போதுமானது.இதன் மூலம் ஆண்மை அதிகரிக்கும். இதனை தொடர்ந்து ஒரு மண்டலம் எடுத்து கொள்ள வேண்டும்.

இன்று இந்த நத்தை சூரி மூலிகையின் பொடியானது அனைத்து விதமான நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது எனவே அவற்றை வாங்கி நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் கட்டாயம் உங்களுக்கு நன்மை சேர்க்கும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top