Health | உடல்நலம்
மாதவிடாய் வலியை குறைப்பது எப்படி..? – வாங்க பாக்கலாம்..!
எப்போதுமே பெண்களுக்கு அந்த நான்கு நாட்களுக்கு மாதவிடாய் வலி எக்கச்சக்கமாக ஏற்படும். இதனால் அவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
இதனை சரி கட்ட எண்ணற்ற வழிகளை பின்பற்றிய போதும் இரண்டாவது நாள் மூன்றாம் நாள் அவர்களை கொன்று எடுக்கும். அந்த வலிக்கு தீர்வு என்பது இதுவரை இல்லை.
இனி இந்த பிரச்சனைகளை ஈசியாக சமாளிக்க சில வழிகள் உள்ளது அதுமட்டுமல்லாமல் மாதவிடாய் வலியை சுத்தமாக உணராமல் இருப்பதற்கு இந்த டீக்களை நீங்கள் வைத்துக் குடித்தால் போதுமானது. ஒருமுறை நீங்கள் முயற்சி செய்து பார்த்தால் உங்களுக்கே ரிசல்ட் நன்றாக தெரியும்.
மாதவிடாய் வலியை போக்கும் வித்தியாசமான வகையில் டீ
இஞ்சி டீ
நீங்கள் இஞ்சி டீ வைத்து குடிக்கும் போது வர டீயில் இஞ்சியை தட்டி போட்டு குடித்தால் உங்களுக்கு மாதவிடாய் வலி குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இதற்கு காரணம் இஞ்சியில் ஆன்ட்டி இன்ஃப்லமென்டரி குணம் கொண்டுள்ளதால் இது மாதவிடாயின் போது ஏற்படும் அடி வயிற்று பிடிப்புக்கு நிவாரணம் தருவதால் நீங்கள் வழியிலிருந்து விடுதலை அடையலாம்.
வர மல்லி டீ
இந்த வர மல்லி டீயானது கொத்தமல்லி விதைகளை பொடித்து கொதிக்கும் நீரில் போட்டு மாதவிடாய் காலத்தில் இரண்டு முறை நீங்கள் குடிக்கும் போது உங்களுக்கு ஏற்படும் வயிற்று வலி அடங்கும். அதுமட்டுமல்லாமல் இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் அதுவும் கட்டுப்படும்.
சோம்பு டீ
பொதுவாகவே சோம்புக்கு வலியை போக்கக்கூடிய தன்மை உள்ளது. எனவே மாதவிடாய் சமயத்தில் நீங்கள் சோம்பு டீயை அதாவது சோம்பினை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடிக்கலாம். அப்படி குடிக்கும்போது உங்களால் தாங்க முடியாமல் இருக்கக்கூடிய அந்த வழி கட்டாயம் குறையும்.
லவங்கப்பட்டை டீ
என்னால் சற்றும் பொறுக்க முடியவில்லை என்று அலறி துடித்து மாதவிடாய் வலியால் கஷ்டப்படக்கூடிய பெண்கள் அனைவரும் லவங்கப்பட்டையை எடுத்து நன்கு பொடித்து ஒரு பாத்திரத்தில் நீரை விட்டு சோம்பினை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இந்த கொதித்த நீரை இளம் சூட்டில் பருகுவதின் மூலம் உங்கள் வலி உடனே குறையும்.
லெமன் கிராஸ் டீ
நல்ல நறுமணத்தோடு இருக்கும் லெமன் கிராஸை நீங்கள் சிறிதளவு நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடிக்கலாம். இந்த லெமன் கிராஸ்ஸில் வைட்டமின் சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் அதிகமாக உள்ளதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை மிக எளிதில் நீக்கிவிடும்.
மேற்குரிய இந்த டீகளை நீங்கள் உங்கள் மாதவிடாய் சமயத்தில் செய்து குடிப்பதின் மூலம் நிச்சயமாக நிவாரணம் பெறலாம். நீங்களும் ஒருமுறை இதை சரி செய்து பார்த்து பலன் எப்படி உள்ளது என்பதை கூறுங்களேன்.