Connect with us

ஆரோக்கியமான வாழ்வுக்கு சித்தர்கள் விட்டு சென்ற மருத்துவ குறிப்புகள்..!!

Ground nut, Siddha Medicinal Tips, Skin Problem, சரும பிரச்சனை, சித்த மருத்துவ குறிப்புகள், நிலக்கடலை

Health | உடல்நலம்

ஆரோக்கியமான வாழ்வுக்கு சித்தர்கள் விட்டு சென்ற மருத்துவ குறிப்புகள்..!!

 சித்தர்கள் மனிதனுக்கு எண்ணற்ற நன்மைகளை நம்முடைய ஆரோக்கியத்தில் ஏற்படுத்திக் கொள்ள விட்டுச் சென்ற மருத்துவ குறிப்புகளை பின்பற்றி நாம் வாழ்வதின் மூலம் என்றும் இளமையாகவும் நூறு வயது வரை நோய் நொடி இல்லாமல் வாழக்கூடிய வழிமுறைகளை வகுத்து  தந்திருக்கிறார்கள்.

Ground nut, Siddha Medicinal Tips, Skin Problem, சரும பிரச்சனை, சித்த மருத்துவ குறிப்புகள், நிலக்கடலை

 அப்படிப்பட்ட  சித்தர்கள் சில முக்கியமான மூலிகைகளைக் கொண்டு நமது உடலுக்கு ஏற்படக்கூடிய நோய்களை எளிதில் தீர்க்கக் கூடிய உபாயத்தை நமக்கு அருளியிருக்கிறார்கள். அந்த வகையில் இன்று எந்த கட்டுரையில் சில முக்கிய சித்த மருத்துவ குறிப்புகளை காணலாம்.

சித்த மருத்துவ குறிப்புகள்

நமது உடலில் சொறி சிரங்கு மற்றும் சரும பிரச்சனைகளுக்கு நிவாரணத்தை தரக்கூடியது குப்பைமேனி. குப்பையாய் இருக்கும் மேனியை அழகாக மாற்றுவதால் தான் இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்தது. இந்த குப்பை மேனியையும் உப்பையும் சேர்த்து அரைத்து நன்கு தேய்த்து வர சருமம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் விட்டு ஓடும்.

இதையும் படிங்க :  " நரம்புத்தளர்ச்சி இருக்கா..!" - அப்ப கட்டாயம் இந்த டயட்ட நீங்க ஃபாலோ பண்ணுங்க..!!

Ground nut, Siddha Medicinal Tips, Skin Problem, சரும பிரச்சனை, சித்த மருத்துவ குறிப்புகள், நிலக்கடலை

வீட்டில் நாம் பயன்படுத்தும் கிராம்பை லேசாக தண்ணீர் விட்டு மை போல அரைத்து நெற்றி மற்றும் மூக்கு தண்டில் பற்று போட தலைவலி நீரேற்றம் போன்றவை குணமாகும்.

சின்ன குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நீர் கோவை குணமாக கரிசாலை சாறுடன் தேன் கலந்து கொடுத்து வந்தால் போதுமானது. விரைவில் நீர் கோவை விலகும்.

 நிலக்கடலை காய் இலையை வேகவைத்து அடிபட்ட இடத்தில் கட்டி வந்தால் வீக்கம், மூட்டு பிசதல் போன்றவை சரியாகும்.

Ground nut, Siddha Medicinal Tips, Skin Problem, சரும பிரச்சனை, சித்த மருத்துவ குறிப்புகள், நிலக்கடலை

 கற்பூரம், கிராம்பு, ஓமம் இவற்றை எடுத்து தட்டி சமூலம் எடுத்து வாய் உள்ள ஈறுகளில் இருக்கக்கூடிய வீக்கத்தின் மீது தடவி வந்தாலோ அல்லது வாய் கொப்பளித்து வந்தாலோ ஈறுகளில் இருக்கும் வீக்கம் குறைந்து வலியும் குறையும்.

இதையும் படிங்க :  "உஷாரய்யா உஷாரு… !" - இனிமே இந்த பழம் PLUS இந்த பழத்தை ஒன்னா சேர்த்து சாப்பிடாதீங்க..!!

 கடுக்காய் பிஞ்சு சுக்கு இவற்றை சம அளவு எடுத்து நன்கு நுணுக்கி நீரில் போட்டு காய்த்து இரவு நேரத்தில் நீங்கள் குடித்து வந்தால் மலச்சிக்கலில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

Ground nut, Siddha Medicinal Tips, Skin Problem, சரும பிரச்சனை, சித்த மருத்துவ குறிப்புகள், நிலக்கடலை

மேலும் உங்கள் முகம் பொலிவாக வேண்டும் என்றால் உலர்ந்த ரோஜா இதழ்களுடன், பன்னீர், சந்தனம் அரைத்து முகத்தில் தடவி வாருங்கள் உங்கள் முகம் மினுமினுப்பாக மாறிவிடும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top