Health | உடல்நலம்
“அன்று முதல் இன்று வரை வசம்பு ரகசியம்..!” எண்ணற்ற பயன்கள் நீங்களும் யூஸ் பண்ணுங்க..!
கைவசம் வசம்பு இருந்தாலே போதும் எண்ணற்ற நோய்களை இயற்கை முறையில் நீங்கள் தடுத்து நிறுத்தி தீர்வு பெற முடியும்.
மேலும் இந்த வசம்பு கார சுவையோடு இருப்பதோடு வெப்பத்தன்மை கொண்டதால் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். உடல் வெப்பநிலை அதிகரிப்பதின் காரணமாக பசியை தூண்டக்கூடிய அற்புத ஆற்றல் இந்த உடம்புக்கு உள்ளது.
வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் வசம்பினை சேர்த்த மாத்திரத்திலேயே அந்தப் பிரச்சனைகள் பறந்தோடி வயிறும் லேசாக மாறிவிடும்.
வசம்பானது கொடிய விஷத்தன்மை உள்ள விஷத்தை எளிதாக இறக்கக்கூடிய ஆற்றல் மிக்கது என்பதால் அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு வீடுகளிலும் அஞ்சலை பெட்டியில் வசம்பு முக்கியமான மருந்து பொருளாக இருக்கும்.
எனவேதான் குழந்தை பிறந்த வீடுகளில் குழந்தைகளின் கையில் வசம்பை கட்டி விடுவார்கள். இதன் மூலம் நுண்ணுயிரிகளின் தாக்குதலில் இருந்து அந்த குழந்தை தப்பித்துக் கொள்ளும்.
இது எல்லா வகையான தொற்றுக்களையும் எளிதில் எதிர்த்து தகர்த்தெறிய கூடிய சக்தி வசம்புக்கு இருப்பதால் வசம்பை தூள் செய்து தேனில் கலந்து குடிப்பதன் மூலம் உங்களது எதிர்ப்பு ஆற்றல் பன்மடங்காக அதிகரிக்கும்.
குழந்தைக்கு வாந்தி ஏற்படும் போது அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கவலைப்படும் தாய்மார்கள் வசம்பை சுட்டு அந்த கரியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் பூசுவதின் மூலம் வாந்தி பேதி கட்டுப்படும்.
மேலும் பேச முடியாத குழந்தைகளுக்கு வசம்பை சுட்டு இதுபோல் செய்வதால் எளிதில் பேச்சு வரும் என்று கூறுகிறார்கள்.
வீட்டை துடைத்து விடும்போது கருவேப்பிலை சாறு மஞ்சள் தூள் இவற்றோடு வசம்பு பொடியும் சேர்த்துக் கலந்து வீட்டை துடைத்து விட்டால் மிகச்சிறந்த கிருமி நாசினியாக அது பயன்படும்.
அத்தோடு இந்த வசம்பானது தேள்கடி மற்றும் பூரான் கடித்த கடிவாய் பகுதியில் மஞ்சளோடு சேர்த்து கட்டிவர கடுகடுப்பு நீங்குவதோடு எளிதில் விஷமும் இறங்கும்.
சொறி, சிரங்கு இருப்பவர்கள் தேங்காய் எண்ணெயில் வசம்பு பொடி தேய்த்து குப்பைமேனி சாறையும் கலந்து சொறி இருக்கக்கூடிய பகுதிகளில் தடவி வந்தால் சொறி நீங்கும், சருமத்தை மேம்படுத்தும்.
வசம்போடு பூண்டினை வைத்து பச்சையாக இடித்து உண்ணும் போது வயிற்றில் இருக்கக்கூடிய புழுக்கள் அனைத்தும் அழிந்து போகும்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!