Connect with us

மேஜிக் செய்தது போல.. வீட்டு வேலையை எளிதாக்கும் 10 சிறந்த House Cleaning டிப்ஸ்..!

house cleaning hack

Home and Garden | வீடு தோட்டம்

மேஜிக் செய்தது போல.. வீட்டு வேலையை எளிதாக்கும் 10 சிறந்த House Cleaning டிப்ஸ்..!

House Cleaning : நம் வீட்டை சுத்தம் செய்வது என்பது ஒரு கடினமான வேலை, என்றாலும் கூட, சுத்தம் செய்து முடித்த பின் நமக்குள் ஒரு அற்புதமான உணர்வு ஏற்படும் என்பது, உண்மை தானே..!

அப்படி, வீட்டை சுத்தம் செய்யும் வேலையை எளிமையாக்கும், பத்து, பயனுள்ள குறிப்புகளை, இங்கே நாம் பார்க்கலாம்.

1 . வினிகர் பேக்கிங் சோடா

House cleaning, house cleaning hacks, house cleaning tips

வீட்டில் உள்ள பொருட்களை சுத்தம் செய்வதில் வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவின் பங்கு மிகப்பெரியது.இந்த இரண்டு பொருட்களும், பலவிதமான மேற்பரப்புகளை சுத்தம் செய்ய சிறந்தவை.

உங்கள் கழிப்பறை, குளியல் தொட்டி, உடையில் இருக்கும் எண்ணெய் கறை, கேஸ் அடுப்பில் உள்ள அழுக்குகள், மிக்ஸியில் உள்ள அழுக்குகள் போன்றவற்றை சுத்தம் செய்ய வினிகர் மற்றும் பேக்கிங் சோடா கலவையைப் பயன்படுத்தலாம்.

2.லின்ட் ரோலர்

பொசுபொசுவென இருக்கும் பகுதிகள் மற்றும் பொருட்களை சுத்தம் செய்ய லின்ட் ரோலரைப் பயன்படுத்துங்கள்.அவற்றில் உள்ள தூசி, செல்லப்பிராணிகளின் முடி மற்றும், பிற குப்பைகளை அகற்ற லின்ட் ரோலர் எளிதான மற்றும் பயனுள்ள வழியாகும்.

3:ஸ்கூஜி

House cleaning, house cleaning hacks, house cleaning tips

தரைவிரிப்புகளில் இருந்து செல்லப்பிராணியின் முடியை அகற்ற, ஸ்கூஜியை பயன்படுத்துங்கள்.உங்கள் வாக்யூம் கிளீனர் தவறவிட்ட செல்லப்பிராணியின் முடியை எடுக்க, உங்கள் கம்பளத்தின் மேல் ஒரு ஸ்கூஜி-ஐ பயன்படுத்தி சுத்தம் செய்தால் பளிச்சென சுத்தமாகும்.

இதையும் படிங்க :  " ரூம் ஸ்ப்ரே இனி உங்கள் வீட்டுக்கு வேண்டாம்..!" - இதை செய்தாலே போதும்...!

4.ரப்பர் கையுறைகள்

மரச்சாமான்களில் இருந்து செல்லப்பிராணியின் முடியை அகற்ற ரப்பர் கையுறையை பயன்படுத்துங்கள். செல்லப்பிராணியின் முடியை சேகரிக்க, ரப்பர் கையுறையைப் போட்டு, உங்கள் மரச்சாமான்களின் மீது உங்கள் கையை தேய்த்தாலே போதும், சிறந்த முறையில் சுத்தமாகிவிடும். ,

5:பழைய பிரஷ்

House cleaning, house cleaning hacks, house cleaning tips

வீட்டில் உள்ள மூளை, முடுக்குகள் என்று சொல்லப்படும் இடங்களை சிறிய இடைவெளிகளை சுத்தம் செய்ய உங்களுடைய பழைய டூத் ப்ரஷ்ஷை பயன்படுத்தவும்.டைல்ஸ் கோடுகள், மூலைகள் மற்றும் பிற சாதனங்களைச் சுற்றியுள்ள சிறிய இடங்களைச் சுத்தம் செய்வதற்கு, டூத் பிரஷ் சிறந்தது.

6:மைக்ரோவேவ்-க்கு எலுமிச்சை

உங்கள் மைக்ரோவேவ் ஓவனை, எலுமிச்சை கொண்டு சுத்தம் செய்யுங்கள். எலுமிச்சையை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு விடவும். சில நிமிடங்கள், கிண்ணத்தை மைக்ரோவேவ்வில் வைத்து, கொதிக்க வைக்கவும். பின்னர், மைக்ரோவேவின் உட்புறத்தை, ஒரு துணியால் துடைக்கவும்.

7:காப்பி ஃபில்டர்

House cleaning, house cleaning hacks, house cleaning tips

கண்ணாடியை சுத்தம் செய்ய காப்பி ஃபில்டர் பேப்பர்களை பயன்படுத்தவும். கண்ணாடி மேற்பரப்புகளை சுத்தம் செய்வதற்கு, காப்பி ஃபில்டர் பேப்பர்கள் சிறந்தவை ஆகும்.ஏனெனில் அவை மென்மையானவை, மற்றும் கண்ணாடியின் மேல் கோடுகளை விடாமல் பளிச்சென மின்ன செய்யும்.

இதையும் படிங்க :  "செல்லப்பிராணிகளில் மூலம் துர்நாற்றம் ஏற்படுகிறதா..!" - அதை எளிதில் நீக்க டிப்ஸ்..!!

8: ட்ரையர் ஷீட்

ஃபேஸ் போர்டுகளை சுத்தம் செய்ய, ட்ரையர் ஷீட்டுகளை பயன்படுத்தவும். உங்கள் பேஸ்போர்டுகளில் தூசி மற்றும் அழுக்குகளை எடுக்க, இந்த ட்ரையர் ஷீட்டுகளை பயன்படுத்துங்கள்.

9:வினிகர் கரைசல்

House cleaning, house cleaning hacks, house cleaning tips

கடினமான தளங்களைச் சுத்தம் செய்ய வினிகர் நீர்க்கரைசலை பயன்படுத்தவும். சம அளவு வினிகர் மற்றும் தண்ணீரைக் கலந்து, கடினமான கரைகளை சுத்தம் செய்ய ஒரு துடைப்பானை இதில் நனைத்து பயன்படுத்தவும்.

10: துப்புரவு பொருட்கள்

துப்புரவு பொருட்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் அதனை ஒழுங்காக பராமரிப்பதும். எனவே, துப்புரவுப் பொருட்களை ஒழுங்கமைக்க ஷவர் கேடியைப் பயன்படுத்தவும்.உங்கள் துப்புரவுப் பொருட்களை, ஒழுங்கமைத்து எளிதாக அணுகக்கூடிய வகையில், உங்கள் கழிவறையில் ஒரு பகுதியில், ஷவர் கேடியைத் தொங்கவிடவும்.

தொடர்ந்து உபயோகப்பூர்வமான தகவல்களை பெற, இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம். ,

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top