Home and Garden | வீடு தோட்டம்
“திடீர் பணம்.. வரவு வேண்டுமா..!” – அப்ப இந்த மூணு பொருட்களை மஞ்சள் துணியில முடிஞ்சு பாருங்க…!!
பணம் பாதாளம் வரை பாயும். பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் இதுபோன்ற பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள் இதன் மூலம் பணம் என்பது ஒருவது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
அந்த பணத்தை தேடி தான் தினமும் நாம் ஓடிக்கொண்டு இருக்கிறோம். எவ்வளவுதான் சம்பாரித்தாலும் பண வரவு இருந்தாலும் என்னிடம் பணம் தங்கவே இல்லை என்று ஒரு சில புலம்பி தவிக்கிறார்கள்.
எனவே பணம் வரவு கிடைக்க, அந்த பணத்தை சிக்கனமான முறையில் சேமிக்க முடியாமல் போகிறதே என்று வருத்தப்படுபவர்கள் கட்டாயம் இந்த கட்டுரையை முழுமையாக படித்து விடுவதின் மூலம் உங்களது சேமிப்பை அதிகரிக்கலாம்.
உங்களுக்கு திடீர் என்று பணவரவு ஏற்படவும் கிடைத்த பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளவும் இந்த பரிகாரம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இதற்கு நீங்கள் முதலில் ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு எந்த மஞ்சள் துணியில் இரண்டு துண்டு கற்பூரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதனோடு இரண்டு ஏலக்காயை சேர்த்து விடுங்கள்.
இப்போது சோம்பு என்று அழைக்கப்படும் பெருஞ்சீரகத்தை 27 எண்ணிக்கையில் எடுத்து வைத்து நன்கு முடிந்து கொள்ளுங்கள். இந்த முடிச்சில் நீங்கள் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து உங்களின் பூஜை அறையில் வையுங்கள்.
இப்படி நீங்கள் உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் இதற்கு தூப தீபம் காட்டுவதன் மூலம் உங்கள் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அதேபோல் நீங்கள் பணம் வைக்கும் இடங்களான பீரோ, மணி பர்ஸ் ,கல்லாப்பெட்டி போன்றவற்றிலும் இதை வைக்கலாம் எதை வைத்தாலும் நீங்கள் வாரத்துக்கு ஒருமுறை இதை மாற்றி விடுவது அவசியம்.
அவ்வாறு நீங்கள் மாற்றும்போது வெள்ளிக்கிழமை காலை 6:00 மணிக்குள் 7:00 மணிக்குள் நீங்கள் இதை மாற்றி முடிந்து வைக்க வேண்டும் இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
மேலும் திடீர் பணயோகம் வந்து உங்கள் வாசல் கதவை தட்டும் மிக எளிமையான இந்த பரிகாரத்தை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள் உங்களுக்கே அதிர்ஷ்டம் எப்படி உங்களிடம் தேடிவந்தது என்று நீங்கள் உணர்வீர்கள்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!