Connect with us

உங்கள் வீட்டு தோட்டத்தில் இந்த குறுகிய கால காய்கறிகளை வளர்க்கலாமே..!

Carrot, Short term vegetables, Vegetables, காய்கறி, குறுகிய காலத்தில் பயனளிக்கும் காய்கறிகள், கேரட்

Home and Garden | வீடு தோட்டம்

உங்கள் வீட்டு தோட்டத்தில் இந்த குறுகிய கால காய்கறிகளை வளர்க்கலாமே..!

இன்றுள்ள காலகட்டத்தில் அதிக அளவு கெமிக்கல்களை போட்டுத்தான் காய்கறிகள் அனைத்துமே விளைகிறது. இல்லை என்றால் காய்கறிகள் இவ்வளவு மலிவாகவோ, எளிதாகவோ நமக்கு கிடைக்காது.

காய்கறிகள் மட்டுமல்லாமல் உணவு பண்டங்கள் அனைத்திலும் கலப்படமாகி விட்ட இந்த உலகத்தில் நீங்கள் நஞ்சு இல்லாத உணவை உண்ண வேண்டும் என்றால் உங்கள் வீட்டு மாடி தோட்டத்தில் குறுகிய காலத்தில் வளர்ந்து பயனை அளிக்கக்கூடிய காய்கறிகளை வளர்த்து பயன் பெறலாம்.

Carrot, Short term vegetables, Vegetables, காய்கறி, குறுகிய காலத்தில் பயனளிக்கும் காய்கறிகள், கேரட்

அப்படி குறுகிய காலத்தில் வளரக்கூடிய காய்கறிகள் என்னென்ன அதை பயிரிடுவது எப்படி என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

குறுகிய காலத்தில் பயனளிக்கும் காய்கறிகள் என்ன தெரியுமா?

1.முள்ளங்கி

இதையும் படிங்க :  வீட்டில் எலி தொல்லையால் அவதியா? இத ஃபாலோ செய்து எலிய ஒழிச்சு கட்டுங்க..!!

Carrot, Short term vegetables, Vegetables, காய்கறி, குறுகிய காலத்தில் பயனளிக்கும் காய்கறிகள், கேரட்

முள்ளங்கி பயிரிட்ட மூன்று மற்றும் நான்கு வாரங்களுக்குள் விளைச்சலைத் தரும். எனவே முள்ளங்கியை உங்கள் வீட்டு தோட்டத்தில் வளர்க்கலாம். இதனை பானைகள் அல்லது தொட்டிகளில் வளர்ப்பதின் மூலம் நீங்கள் பயன் பெற முடியும். இல்லையெனில் முள்ளங்கி விதையிட்டால் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் முள்ளங்கி முளை பயிர் வந்துவிடும். இதை எடுத்து நீங்கள் நடவு செய்வதின் மூலம் முள்ளங்கியை எளிதாக வீட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும்.

2.கேரட்

Carrot, Short term vegetables, Vegetables, காய்கறி, குறுகிய காலத்தில் பயனளிக்கும் காய்கறிகள், கேரட்

கேரட்டும், முள்ளங்கியை போலவே நீங்கள் பயிரிட்ட ஆறு வாரங்களுக்குள் மிருதுவான கேரட் உங்களுக்கு கிடைக்கும். இதை பானை மற்றும் தொட்டியில் பயிர் செய்ய முடியும். இதற்காக நீங்கள் மண்ணின் மேல் கேரட் விதைகளை தூவி அதற்கு மேல் சலித்த மண்ணை போட்டு மூடி விடுங்கள். பிறகு  முளைப்பயிர் வந்தவுடன் தனியாக எடுத்து நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க :  "செல்லப்பிராணிகளில் மூலம் துர்நாற்றம் ஏற்படுகிறதா..!" - அதை எளிதில் நீக்க டிப்ஸ்..!!

3.அவரை

Carrot, Short term vegetables, Vegetables, காய்கறி, குறுகிய காலத்தில் பயனளிக்கும் காய்கறிகள், கேரட்

அவரையும் நீங்கள் பயிரிட்ட குறுகிய காலத்திலேயே உங்களுக்கு அதிக அளவு விளைச்சலை தரக்கூடிய காயாகும். இது தனது வேர்களில் வளிமண்டல நைட்ரஜனை  தேக்கி வைத்து இருக்கும். இதன்மூலம் மண்ணுக்கு சத்து அதிக அளவு கிடைக்கும். ஐம்பது நாட்களில் நீங்கள் அவரை பயிரிட்டு அறுபடை செய்ய முடியும்.

எனவே மேற்கூறிய இந்த காய்கறிகளை உங்கள் வீட்டு தோட்டத்தில் போட்டு எளிய முறையில் நீங்கள் நஞ்சில்லாத காய்கறிகளை பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top