Home and Garden | வீடு தோட்டம்
“வெள்ளி கொலுசு கருப்பாவே இருக்கா..!” – இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணா பளபளக்கும்..!!
பெண்கள் தங்கள் கால்களில் விரும்பி போடக்கூடிய கொலுசு வெள்ளியாக இருக்கும் பட்சத்தில் விரைவில் கருத்து விடுகிறதா? அப்படி என்றால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸை ஃபாலோ செய்தால் போதும் உங்கள் வெள்ளி கொலுசு பள பள என புதிது போல் மின்னும்.
டிப்ஸ் 1
ஒரு பாத்திரத்தில் நீரை விட்டு அதை அடுப்பில் வைத்து சூடேற்றி அதில் நீங்கள் பல் தேய்க்க கூடிய பேஸ்டை அதில் நன்றாக கலந்து விடுங்கள். பிறகு உங்கள் வெள்ளி கொலுசை அதனால் போட்டு ஐந்து நிமிடம் அளவு அப்படியே வைத்து விடுங்கள். பிறகு எடுத்து பிரஷ் மூலம் நன்கு தேய்க்கும் போது கருப்பானது நீங்கி வெள்ளை வெளேர் என்று பளிச் என மின்னும்.
டிப்ஸ் 2
மீண்டும் அதே போல் ஒரு பாத்திரத்தில் நீரை விட்டு அதனோடு பேக்கிங் சோடா மற்றும் உப்பை போட்டு நன்கு கொதிக்க விடவும். பிறகு இதில் உங்கள் வெள்ளி கொலுசு சில மணி நேரங்கள் போட்டுவிட்டு பின் எடுத்து துணியால் நன்கு துடைத்தால் உங்கள் வெள்ளி கொலுசு புதுசாக மாறிவிடும்.
டிப்ஸ் 3
உங்கள் வீட்டில் இருக்கும் திருநீரை எடுத்து அதை அப்படியே ஒரு துணியில் போட்டு அந்த துணிக்குள் வெள்ளி கொலுசை போட்டு நன்கு தேய்த்து விடுங்கள். சுமார் தொடர்ந்து 5 நிமிடங்கள் நீங்கள் இதனை செய்வது மூலம் வெள்ளி கொலுசில் இருக்கும் கருமை நீங்கிவிடும்.
டிப்ஸ் 4
இவ்வளவு பீதாம்பரியை கொண்டு உங்கள் வெள்ளி கொலுசுகளில் நன்கு திருப்பி எடுக்கும்போது புதிய வெள்ளி கொலுசு போல காட்சி தரும்.
மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தி வருவதால் உங்கள் வெள்ளி கொலுசை புது கொலுசு போல் மாற்றிவிடலாம்.மேலும் நீங்கள் உப்பு நீரில் அதிகமாக உங்கள் வெள்ளி கொலுசை பயன்படுத்தாமல் இருந்தாலே அது பளபளப்பாக இருக்கும்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!