Connect with us

உங்க வீட்டு தோட்டத்தில் ரோஜா பூ அதிகமாக பூக்க வேண்டுமா? இதுக்கு இத செஞ்சால கொத்துக் கொத்தா பூக்கும்..!

Rose flower, Tips to get more rose flower, To get more Flowers in rose plant, ரோஜா பூ, ரோஜா பூக்கள் அதிகம் பூக்க டிப்ஸ், ரோஸ் செடியில் பூக்கள் அதிகம் பூக்க

Home and Garden | வீடு தோட்டம்

உங்க வீட்டு தோட்டத்தில் ரோஜா பூ அதிகமாக பூக்க வேண்டுமா? இதுக்கு இத செஞ்சால கொத்துக் கொத்தா பூக்கும்..!

உங்கள் வீட்டு தோட்டத்தில் அதிக அளவு ரோஜா செடிகள் இருக்கிறதா எப்படி தான் பராமரித்தாலும் ரோஜாவில் பூ அதிகமாக பூப்பதில்லை என்ற கவலை உங்களுக்கு உள்ளதா? ஆம் என்றால் நீங்கள் ஃபாலோவ் பண்ணக்கூடிய டிப்ஸ்களை சரியாக ஃபாலோ பண்ணின நிச்சயமாக உங்கள் வீட்டு ரோஜா பூவும் கொட்டு கொத்தாக பூ பூக்கும்.

அதற்கு நீங்கள் அதிக செலவு செய்யத் தேவையில்லை. ரேஷன் கடையிலிருந்து வாங்கி வரும் கோதுமையை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த அரைத்த கோதுமையை அப்படியே ஒரு வாரம் புளிக்க விடவும் கோதுமை நன்கு புளிக்க ஆரம்பித்தால் அதை நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஆரம்பிக்கும்.

இந்த கலவையை நீங்கள் உங்கள் ரோஜா செடி இருக்கக்கூடிய மண்ணில் சிறிது தோண்டி ஊற்றினால் போதுமானது. மேலும் இந்த கரைசலோடு குறைந்த பட்சம் ஐந்து லிட்டர் அளவாவது நீங்கள் தண்ணீரை செலுத்தி கரைசலாக மாற்றி வரும்போது இது மண்ணுக்கு நல்ல வளமாக செயல்படுவதோடு மண்புழுக்களின் உற்பத்தியும் தூண்டி விடுகிறது.

நீரினை சேர்க்கும்போது அது உங்கள் செடிகளுக்கு நல்ல அடி உரமாக அமையும். எனினும் அந்த நீரினை அப்படியே நீங்கள் வேர் பகுதியில் விட்டுவிடக்கூடாது. குறைந்தபட்சம் அரை லிட்டர் அளவு இருக்கக்கூடிய நீரை வேரிலிருந்து சற்று தள்ளி ஒவ்வொரு செடிக்கும் ஊற்றி விடுங்கள்.

மேலும் 15 நாட்கள் தொடர்ந்து இதனை நீங்கள் செய்யும் போது நீங்கள் எதிர்பார்க்காத அளவு ரோஜா பூ, உங்கள் வீட்டில் பூத்துக் குலுங்கும்.

மேலும் நீங்கள் வைக்கும் டீ டிக்கெசன் சக்கை மற்றும் காபி டிக்கேஷன் சக்கை முட்டை ஓடு இவற்றை நீங்கள் வெளியே தூரப் போடாமல் உங்கள் ரோஜா செடியில் இருக்கக்கூடிய பகுதியில் அப்படியே போட்டு மண்ணில் மூடி விடுங்கள். இதுவும் ரோஜா செடிக்கு நல்ல பூக்களை கொடுக்கக் கூடிய வகையில் உரமாக மாறிவிடும்.

இதன் மூலம் உங்கள் வீட்டு ரோஜா போல் மிக செழிப்பாக வளர்வதோடு மட்டுமல்லாமல் பூக்களையும் அதிக அளவு கொடுக்கும்.

இதனை பார்ப்பவர்கள் கண் படும்படியாக இப்போது உங்கள் வீட்டு ரோஜாக்கள் பஞ்ச் பண்சாக பூத்துக் குலுங்குவதை பார்த்தால் உங்களுக்கு மனம் மகிழ்ச்சியோடு இருப்பதோடு எல்லோருக்கும் எந்த பூக்களை கொடுத்து அசத்த முடியும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top