Connect with us

“இல்லத்தரசிகள் கஷ்டம் இல்லாமல் இலகுவாக செயல்பட ..!” – சில சூப்பர் டிப்ஸ்..!

home maker helpfull tips, Home makers, இல்லத்தரசிகளுக்கு பயன்படக்கூடிய டிப்ஸ், இல்லத்தரசிகள்

Home and Garden | வீடு தோட்டம்

“இல்லத்தரசிகள் கஷ்டம் இல்லாமல் இலகுவாக செயல்பட ..!” – சில சூப்பர் டிப்ஸ்..!

இல்லத்தின் கண்களாக விளங்கக்கூடிய பெண்கள் இல்லத்தரசிகள் என்று அன்போடு அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் இல்லை என்றால் வீட்டில் எதுவும் இல்லை. ஏன் யாரும் இல்லை என்று கூறக்கூடிய அளவுக்கு அவர்களின் செயல்கள் அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

home maker helpfull tips, Home makers, இல்லத்தரசிகளுக்கு பயன்படக்கூடிய டிப்ஸ், இல்லத்தரசிகள்

தனக்கு என்று வாழாமல் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்காகவும் தன்னலம் இல்லாமல் உழைக்கும் இல்லத்தரசிகள் எளிதில் அவர்கள் செயல்களை செய்து கொள்ள சில எளிமையான டிப்ஸ் உள்ளது. இந்த டிப்ஸை நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் உங்கள் வீட்டை மேலும் அழகாகவும் ஈசியாகவும் நீங்கள் பராமரிக்க  முடியும்.

இல்லத்தரசிகளுக்கு பயன்படக்கூடிய டிப்ஸ்

வீட்டில் நீங்கள் துணி துவைக்கும் போது துணிகளில் சுருக்கம் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் உங்கள் துணிகளை அலசி முடித்த பிறகு நான்கைந்து சொட்டுக்கள் கிளிசரின் சேர்த்து அலசுங்கள். இப்போது உங்கள் துணிகள் சுருக்கு விழாது. கையால் துவைக்காமல் மிஷினில் துவைப்பவர்கள் அலசும்போது நான்கு சொட்டுக்கள் கிளிசரினை வாஷிங்மெஷினில் விட்டு விட்டால் போதுமானது.

இதையும் படிங்க :  " உங்கள் மொபைல் போன் நீடித்து உழைக்க வேண்டுமா? " - அப்ப இந்த எளிய பராமரிப்பு வழிகள ஃபலோ செய்யுங்க..!!

home maker helpfull tips, Home makers, இல்லத்தரசிகளுக்கு பயன்படக்கூடிய டிப்ஸ், இல்லத்தரசிகள்

இந்தத் துணிகளை நீங்கள் காய போட நைலான் கயிறை பயன்படுத்துகிறீர்கள் என்றால் நைலான் கயிறை வாங்கி வந்தவுடன் சோப்பு நீரில் ஊறவைத்து பின்பு  அலசி கட்டி விடுங்கள். இப்படி பயன்படுத்தும் போது நைலான் கயிறு நீண்ட நாட்கள் உழைக்கும் அறுந்து போகாது.

வீட்டில் நீங்கள் அவசர அவசரமாக வேலை செய்யும் போது எண்ணெய் பாட்டில் கை நழுவி கீழே விழுந்து உடைந்து விட்டால் எப்படி சுத்தம் செய்வது என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். உடனடியாக கோல பொடி இருந்தால் அதை எடுத்து வந்து அதன் மீது கொட்டி விட்டு துடைத்து பாருங்கள். எண்ணெய் பசை சிறிது கூட உங்கள் தரையில் ஒட்டாமல் அப்படியே வந்து விடும்.

இதையும் படிங்க :  உங்கள் வீட்டு தோட்டத்தில் இந்த குறுகிய கால காய்கறிகளை வளர்க்கலாமே..!

home maker helpfull tips, Home makers, இல்லத்தரசிகளுக்கு பயன்படக்கூடிய டிப்ஸ், இல்லத்தரசிகள்

உங்கள் வீட்டில் இருக்கும் மிக்ஸி கிரைண்டரை சுத்தப்படுத்தும் போது பழைய டூத் பிரசை பயன்படுத்தி நீங்கள் சுத்தப்படுத்தி பாருங்கள். புதிது போல் மின்னும். அதே போல் நீங்கள் பயன்படுத்திய பழைய பேஸ்டை போட்டு நன்கு கழுவி துடைத்தால் மிக்ஸி புதிது போல் மின்னும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top