Connect with us

“உங்க வீட்டில் வாட்டர் ஹீட்டர் இருக்கா..!” – அப்ப அத இப்படி மெயின்டைன் பண்ணா புதுசு போல நீடித்து உழைக்கும்..!

Solar water heater, Water Heater, water heater maintenance, சோலார் வாட்டர் ஹீட்டர், வாட்டர் ஹீட்டர், வாட்டர் ஹீட்டர் பராமரிப்பு

Home and Garden | வீடு தோட்டம்

“உங்க வீட்டில் வாட்டர் ஹீட்டர் இருக்கா..!” – அப்ப அத இப்படி மெயின்டைன் பண்ணா புதுசு போல நீடித்து உழைக்கும்..!

 இன்று பெரும்பான்மையான வீடுகளில் வாட்டர் ஹீட்டர் இல்லாமல் இல்லை.இது இன்று அத்தியாவசிய மின்னணு பொருட்களில் வாட்டர் ஹீட்டர் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.

 இந்த வாட்டர் ஹீட்டர் ஆனது குளிர் மற்றும் மழைக்காலங்களில் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது. விறகு அடுப்பு மற்றும் பாயிலருக்கு பிறகு இந்த முறை தற்போது புழக்கத்தில் அதிகளவு உள்ளது என்று கூறலாம்.

Solar water heater, Water Heater, water heater maintenance, சோலார் வாட்டர் ஹீட்டர், வாட்டர் ஹீட்டர், வாட்டர் ஹீட்டர் பராமரிப்பு

 நீங்கள் பயன்படுத்தக்கூடிய வாட்டர் ஹீட்டர், சோலார் வாட்டர் ஹீட்டர் என்றாலும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய வாட்டர் ஹீட்டர் என்றாலும் அதற்குரிய வயரிங்கை நீங்கள் பக்காவாக செய்து இருக்க வேண்டும்.

இதையும் படிங்க :  "வீட்டுத் தோட்டத்திற்கு ஏற்ற குத்து அவரை ..!" - இப்படி வளர்த்துப் பாருங்க..!

அதுமட்டுமல்லாமல் ஒயரிங் செய்யப்பட்டிருந்தால் நீங்கள் கட்டாயம் எர்த் அமைப்பை கொடுத்திருக்க வேண்டும்.இந்த எர்த் அமைப்பு இருந்தால் மட்டும்தான் வாட்டர் ஹீட்டர்ர்களால் ஏற்படக்கூடிய மின்கசிவினால் ஷாக் அடிப்பதற்கு முன்பு மின் தடை ஏற்படும்.

Solar water heater, Water Heater, water heater maintenance, சோலார் வாட்டர் ஹீட்டர், வாட்டர் ஹீட்டர், வாட்டர் ஹீட்டர் பராமரிப்பு

 வாட்டர் ஹீட்டர் பயன்படுத்த நீங்கள் 20 ஆம்ஸ் திறன் கொண்ட ஸ்விட்ச் வகைகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. மேலும் இந்த சுவிட்சுகளை நீங்கள் குளியல் அறைக்கு வெளியில் தான் வைத்திருக்க வேண்டும்.

 வாட்டர் ஹீட்டரில் தண்ணீரை போடுவதற்கு முன்பு தொட்டியில் நீர் இருப்பை உறுதி செய்து கொண்டு நீங்கள் ஹீட்டரை ஆன் செய்ய வேண்டும். அப்படி நீரில்லாத சமயத்தில் நீங்கள் ஹீட்டரை ஆன் செய்து விட்டால் அதில் உள்ள பகுதிகள் அனைத்தும் மெல்ட் ஆகிவிடும்.

இதையும் படிங்க :  பிரஷர் குக்கர் பராமரிப்பு முறைகள் என்னென்ன தெரிந்து கொள்ளலாமா?

Solar water heater, Water Heater, water heater maintenance, சோலார் வாட்டர் ஹீட்டர், வாட்டர் ஹீட்டர், வாட்டர் ஹீட்டர் பராமரிப்பு

 எனவே நீங்கள் உங்கள் மின் சாதன பொருட்களை பயன்படுத்தும் முன்பு ஒயரிங் மற்றும் ஸ்விட்ச் நிலைகள் சரியாக இருக்கிறதா என்பதை ஆறு மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

 அதில் ஏதேனும் பால்ட் இருந்தால் மின்னணு பொருட்கள் புகைந்து போகவும் வாய்ப்பு உள்ளதால் நீங்கள் அதில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top