thirumoorthy
Spirituality | ஆன்மிகம்

திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர்.

--- Advertisement ---

thirumoorthy

இரண்டாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த தலமாக திகழ்கிறது திருமூர்த்திமலை. ஒரு முறை அத்திரி மகரிஷி வெளியே சென்றபோது மும்மூர்த்திகளும் அனுசுயா அன்னையிடம் வந்து தங்களுக்கு நிர்வாணமாக பிச்சையிடுமாறு வேண்டினர். அனுசுயா தேவியும் தனது கணவனை மனதால் நினைத்து தீர்த்தத்தை மும்மூர்த்திகள் மேல் தெளிக்க மூம்மூர்த்திகளும் குழந்தைகளாக மாறினர். பின்பு அந்த குழந்தைகளுக்கு நிர்வாணமாக பாலூட்டி அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த திருத்தலமே இந்த திருமூர்த்திமலை.

 உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் பத்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு முக்கியமான மும்மூர்த்திகளான அமர லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலில் கன்னிமார்கள் மற்றும் பிள்ளையார்  தெய்வங்கள் உள்ளது.

god

திருமணமாகாத நபர்களை இந்தக் கோயிலுக்குச் சென்று அங்குள்ள இரண்டு தர்ப்பை புல் செடியை இணைந்து முடுச்சு போட்டு வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

குழந்தையில்லாதவர்கள் இத்தலத்தில் நீராடி, சப்த கன்னிகளை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள விநாயர் ஆலயத்தின் முன்பு உள்ள ‘வரடிகல்’ என்ற கல்லின் மேல் அமர்ந்து அக்கல்லின் மீது தேங்காய் பழம் வைத்து அந்தக்கல்லை இது கைகளால் பிடித்து மனதார வழிபடவேண்டும். அப்படி செய்யும்பொழுது அந்த தேங்காய் பழத்தை அவர்கள் அறியாமல் தொட்டுவிட்டால் குழந்தை பேறு நிச்சயம் என்பது பலன் பெற்றவர்கள் சொல்கின்றனர்.

two thousand old temple

பல கிராம கோயில்களில் தீர்த்தம் கொண்டு செல்ல இருப்பவர்கள் இந்தக் ஆலயம் வந்து அங்குள்ள ஆற்றில் இருந்து நீரினை எடுத்து கும்பம் தாழித்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மழைக்காலங்களில் அதிக அளவு நீர் கோயிலின் உள் வந்தாலும் கோயிலுக்கு, சிலைக்கு எந்தவித சேதமும் ஏற்படாமல் இருப்பது மும்மூர்த்தியின் சக்தியை எடுத்துக்காட்டுகிறது.

இன்றும் இந்த திருமூர்த்தி மலையில் எண்ணற்ற சித்தர்கள் வாசம் செய்வதாக நம்பிக்கையுள்ளது இங்கு வந்து இந்த சிவனை வழிபட்டுச் செல்வது குடும்பத்தில் சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது மேலும் பிரம்மா விஷ்ணு சிவன் என மும்மூர்த்திகளும்  இருக்கக் கூடிய திருத்தலமாக இருப்பதால்தான் திருமூர்த்தி மலை என்ற பெயர் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற Google News-ல் Tamizhakam பக்கத்தை Follow செய்யுங்கள்.

--- Advertisement ---