Connect with us

“புத்தம் சரணம் கச் சாமி..!” – ஆன்மீகத்தில் புத்தர் கஷ்டத்தை தூக்கி எறிய மனிதர்களுக்கு என்ன சொன்னார் தெரியுமா?

Buddha, Buddha philosophy, Buddha Teaching, புத்தர், புத்தர் போதனை, புத்தர் வழங்கிய தத்துவங்கள்

Spirituality | ஆன்மிகம்

“புத்தம் சரணம் கச் சாமி..!” – ஆன்மீகத்தில் புத்தர் கஷ்டத்தை தூக்கி எறிய மனிதர்களுக்கு என்ன சொன்னார் தெரியுமா?

 மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை எண்ணற்ற கஷ்டங்களை அனுபவித்து வருகிறான்.ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிய மகான்கள் மனிதர்கள் எந்த வழியில் நடந்தால் கஷ்டத்தை விட்டு வாழலாம் என்பது போன்ற கருத்துக்களை பல விதமாக பதிவு செய்து இருக்கிறார்கள்.

 அந்த வரிசையில் அரசனாகப் பிறந்து பிறகு அனைத்தையும் வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கிய புத்தர்  மனிதர்களுக்கு ஏற்படும் கஷ்டத்தை தூக்கி எறிய என்ன செய்ய வேண்டும் என்று கூறினார் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

Buddha, Buddha philosophy, Buddha Teaching, புத்தர், புத்தர் போதனை, புத்தர் வழங்கிய தத்துவங்கள்

கஷ்டத்தை தூக்கி எறிய புத்தர் வழங்கிய தத்துவங்கள்

தத்துவம் 1: கோபத்தை விடுதல்

வாழ்க்கையில் மனிதருக்கு ஏற்படக்கூடிய சில சிக்கல்களினால் கோபத்திற்கு ஆளாவார்கள். அந்த கோபமே உங்களை கொன்றுவிடும் என்பதை உணர்ந்து கோபத்தை விட்டு ஒழித்தால் நல்ல முறையில் வாழ முடியும். எனவே உன்னை அறிந்து கொள்ள தடையாக இருக்கக்கூடிய கோபத்தை முதலில் உங்களிடமிருந்து விரட்டி விடுங்கள்.

தத்துவம் 2: உணருதல்

வாழ்க்கையில் நீங்கள் எதற்காக பிறந்தீர்கள், எதை செய்ய வேண்டும் என்பது போன்றவற்றை நீங்கள் தீர்மானித்து உணர்ந்துவிட்டால் வானமும் வசமாகும். நிலவைக் கூட எட்டிப் பிடிக்கின்ற ஆற்றல் உங்களுக்குள் எழும்.

 எனவே கூறிக்கோள் ஒன்றை வகுத்து அதில் நோக்கி பயணம் செய்யுங்கள். மேலும் உங்களை நீங்கள் உணர்ந்து கொண்டால் எல்லாவற்றிலும் வெற்றி ஜெயம் என்பதை உணருங்கள்.

தத்துவம் 3:  அன்பு செலுத்துதல்

Buddha, Buddha philosophy, Buddha Teaching, புத்தர், புத்தர் போதனை, புத்தர் வழங்கிய தத்துவங்கள்

 இந்த உலகத்தில் இருக்கும் எல்லா ஜீவராசிகளின் மேலும் நீங்கள் உங்கள் அன்பை எந்த அளவு செலுத்த முடியுமோ அந்த அளவு செலுத்துங்கள். இதன் மூலம் அற்புத ஆற்றல் உங்களிடம் பரவும்.

 மேலும் உங்களுக்குள் நேர்மறை ஆற்றல்கள் பல்கி பெருகும். எனவே அன்பு செலுத்துவதை அனைவரிடமும் ஒரே போல் காட்டுங்கள்.

தத்துவம் 4: உண்மையாக இருங்கள்

 எந்த பொருள் சூழ்நிலையிலும் நீங்கள் உண்மையை மாறாக கூறுவதோ அல்லது உண்மைக்கு புறம்பாக நடப்பதோ தவறாகு.ம் உங்களுக்கு இந்த உண்மைதான் அமைதியையும் நிம்மதியையும் தேடித்தரும்.

 எனவே நீங்கள் உண்மையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள் அப்போதுதான் வாழ்க்கையில் நீங்கள் உங்களுடைய லட்சியத்தை எட்டிப் பிடிக்க முடியும்.

Buddha, Buddha philosophy, Buddha Teaching, புத்தர், புத்தர் போதனை, புத்தர் வழங்கிய தத்துவங்கள்

தத்துவம் 5:  எண்ணங்கள்

எப்போதும் மனிதர்களுக்குள் எண்ணக்கூடிய எண்ணம் உயர்வாக இருக்க வேண்டும். யாரையும் அழிக்கக்கூடிய எதிர்மறையான சிந்தனைகளை உங்கள் மனதில் வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

இதனால் தான் எண்ணம் போல் வாழ்வு என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே நீங்கள் எண்ணுவதை மிகச் சிறப்பாக எண்ணினால் எல்லாமே சிறப்பாக அமையும் என்ற கோட்பாட்டை உணர்ந்து செல்லுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top