Spirituality | ஆன்மிகம்
“இன்டர்வியூ போறீங்களா..!” – அப்ப இந்த பொருளை எடுத்துட்டு போங்க வேலை நிச்சயம்..!
இன்று வேலை வாய்ப்பு சுருங்கி வரக் கூடிய காலகட்டத்தில் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களும் வேலை கிடைத்தால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.
எவ்வளவு தான் சொத்து இருந்தாலும் நீங்களாக உழைத்து சம்பாதிக்க கூடிய பைசா ஒரு ரூபாய் என்றாலும் அதற்கு தனி மதிப்பு இருக்கத்தான் செய்கிறது.
நல்ல வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்படுபவர்களும் அப்படி கிடைத்தும் நல்ல சம்பளம் நமக்கு திட்டவில்லையே என்று கவலைப்படுபவர்களும் இந்த ஆன்மீக குறிப்புகளை பின்பற்றுவதின் மூலம் நிச்சயமாக உங்களுடைய கவலையை தீர்க்கும் விதத்தில் நன்மை நடக்கும்.
நல்ல வேலை கிடைப்பதற்கான பரிகாரம்
விக்கனங்களை தீர்த்து வைக்கக்கூடிய விநாயகர் பெருமானை திங்கட்கிழமை தோறும் நீங்கள் கோவிலுக்கு சென்று இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கினை ஏற்றி வைத்து தோப்புக்கரணம் போட்டு உங்களுக்கு எத்தகைய வேலை வேண்டும் என்பதை பற்றி வேண்டிக் கொள்ளுங்கள்.
அத்தோடு விநாயகப் பெருமானுக்கு அருகு மாலையும் சாத்தி உங்களுடைய கோரிக்கையை வைத்து விடுங்கள். இதனை அடுத்து நீங்கள் உங்கள் முயற்சியை கைவிடாமல் வேலை தேடி வந்தீர்கள் என்றால் கட்டாயம் உங்களுக்கு வேலை கிடைக்கும்.
அத்தோடு கூடுதல் சம்பளமும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் அதிகமாகும். உங்கள் பர்சில் சிவப்பு நிற துணி ஒன்றினை வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த துணியை நீங்கள் வைக்கும் போது உங்கள் விருப்பமான கடவுளையோ அல்லது பெண் தெய்வங்களையோ நினைத்துக்கொண்டு அந்த துணியை உங்கள் பர்சலில் வைத்துக் கொண்டு என்று வைக்கச் செல்லுங்கள்.
இன்டர்வியூவில் கட்டாயம் உங்களுக்கு சிறப்பான நிலை கிடைப்பதோடு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் பசுவை பார்க்கும் போது பசு மாட்டிற்கு உங்கள் கையால் மஞ்சள் வாழைப்பழம் வாங்கிக் கொடுங்கள் இது குருவின் அம்சம் என்பதால் குரு பார்க்க உங்களுக்கு கோடி நன்மைகள் கிட்டும். வேலையில்லை எனில் வேலை கிட்டும் சம்பள உயர்வு கிட்டும்.
கோமாதா லட்சுமி கடாட்சம் என்பதால் இதை மறவாமல் செய்வதின் மூலம் உங்களுக்கு விரைவில் வேலை கிட்டும்.