Spirituality | ஆன்மிகம்
“இழந்ததை மீட்டு தரும் இலந்தை பழம் பரிகாரம்..!” – இப்படி செய்து பாருங்க..!!
மனிதன் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலும் இழப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த இழப்பானது பல வகைகளாக நாம் பிரித்துக் கொள்ளலாம். அதில் பொருள் இழப்பு, பண இழப்பு, நகை இழப்பு என இழப்புகளை அடுக்கிக் கொண்டே நாம் செல்லலாம்.
இந்த இழப்புகளால் உங்கள் மனதில் ஈடு செய்ய முடியாத அளவு மனவருத்தம் ஏற்பட்டிருக்கும். அது மட்டுமல்லாமல் இது நமக்கு கெட்ட நேரமாக இருப்பதால்தான் இதையெல்லாம் நாம் ஏமாந்து விட்டோம் என்று நம்மை நாமே தேற்றி கொள்வோம்.
எனினும் நம் ஒரு மனதுக்குள் நாம் தொலைத்த அந்த பொருட்களோ அல்லது சொத்துக்கலோ நமக்கு திரும்ப கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு எண்ணம் உள்ளுக்குள் வளையம் வந்து கொண்டே தான் இருக்கும்.
அப்படி நாம் இழந்துவிட்ட பொருட்களையோ நகைகளையும் சொத்துக்களையோ மீட்க இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதின் மூலம் கட்டாயம் நீங்கள் இழந்தது உங்களை வந்து சேரும்.
இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதற்கு ஒரு இலந்த மரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். மேலும் இலந்த மரத்திற்கு மட்டும் தான் இந்த பரிகாரத்தை செய்ய முடியும். இதற்கு நீங்கள் நேரம் கிழமை என்று எதையும் பார்க்க வேண்டாம்.
மாலை 5 மணிக்கு முன்பாக நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்து முடித்த முடித்து விடலாம். இந்த பரிகாரத்துக்காக நீங்கள் செல்லும்போது மரத்தின் அருகே நின்று கொண்டு நீங்கள் எதை இழந்து இருக்கிறீர்களோ அதை நினைத்து மீண்டும் அது உங்கள் கையில் வந்து சேர வேண்டும் என்ற எண்ணத்தோடு குல தெய்வத்தையும் நினைத்துக் கொண்டு இலந்த மரத்தை பிரார்த்தனையை செய்யுங்கள்.
மனம் உருகி நம்பிக்கையோடு அந்த மரத்தினிடம் மனம் விட்டு இரண்டு நிமிடம் பேசி முடித்துவிட்டு ஏழு முறை அந்த மரத்தைச் சுற்றி வாருங்கள். அப்படி நீங்கள் சுற்றி முடித்து விட்டீர்கள் என்றால் நம்பிக்கையோடு உங்கள் வீட்டுக்கு வந்து விடுங்கள்.
மேலும் இலந்த மரத்தை எப்போதெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்களோ அப்போதெல்லாம் உங்கள் பிரச்சனையை அந்த மரத்தின் முன் வைத்து நீங்கள் வேண்டிக் கொள்வதின் மூலம் இழந்த பொருள் எளிதில் உங்களை வந்தடையும்.
இது பெரியவர்களால் சொல்லப்பட்ட பரிகாரம். எனவே கட்டாயம் நீங்கள் கடைப்பிடித்து பார்த்தால் உங்களுக்கு உண்மை எது என்பது புரிந்துவிடும். எனவே இனிமேல் பொருளை இழந்து விட்டோம் என்று தவிக்காமல் இலந்த மர பரிகாரத்தை செய்து பயனடையுங்கள்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!