Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஆன்மீகத்தில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.

LORD

Spirituality | ஆன்மிகம்

ஆன்மீகத்தில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.

LORD

இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை மூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.மாலை 6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது. கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.

 

அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.

 

காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின் போது, சொல்லுதல் கூடாது சுத்தமான இடத்தில்தான் ஜபிக்க வேண்டும்.

 

கற்பூர ஹாரத்தி – சூடம் காண்பித்தல் பற்றி

 

சூடம் காண்பிக்கும் போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்க வேண்டும்.

 

தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்க வேண்டும்.

KALPURAM

முகத்துக்கு ஒரு தடவை கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.

 

 வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

 

எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

 

சிவனுக்கு உகந்தது வில்வம் ஆகும் .விஷ்ணுவிற்கு உகந்தது  துளசி ஆகும் .விநாயகருக்கு அருகம்புல் ஆகும் .பிரும்மாவிற்கு உகந்தது  அத்தி இலை ஆகும் .

 

இவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்க கூடாது.

 

கலசத்தின் அா்த்தங்கள்

கலசம்(சொம்பு) − சரீரம்

 

கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு

 

கலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) − இரத்தம்

 

கலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை

 

கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்

 

கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை − மூலாதாரம்

COCONUT

கூர்ச்சம் − ப்ராணம்(மூச்சு)

 

உபசாரம் − பஞ்சபூதங்கள்.

 

தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்

 

சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,

தயிர் சாதம், பலகாரம்

 

வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்

 

ஆனி – தேன்

 

ஆடி – வெண்ணெய்

 

ஆவணி – தயிர்

 

புரட்டாசி – சர்க்கரை

 

ஐப்பசி – உணவு, ஆடை

 

கார்த்திகை – பால், விளக்கு

 

மார்கழி – பொங்கல்

 

தை – தயிர்

 

மாசி – நெய்

 

பங்குனி – தேங்காய்.

 

 திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக கிடைக்கும். அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து பூசிகொள்ள கூடாது.

 

பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்ய‌ கூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.

 

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Spirituality | ஆன்மிகம்

 • north north

  Spirituality | ஆன்மிகம்

  மதுரை மீனாட்சி அம்மன் மொட்டை கோபுர முனீஸ்வரர பற்றிய தகவல்கள்

  By

  மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு என்பது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்கு வாசலில் அமைந்துள்ள மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாட்டைக் குறிக்கின்றது. ஒன்பது...

 • varagi varagi

  Spirituality | ஆன்மிகம்

  சொப்பன வாராஹி

  By

  சொப்பன வராகி என்று ஒரு அன்னை இருக்கின்றாள் இந்த அன்னையை உபாசனை செய்து இவளில் அருள் நமக்கு கிட்டிவிட்டால்,நமது எல்லாவிதமான சந்தேகங்களுக்கும்...

 • Spirituality | ஆன்மிகம்

  காக புஜண்டர் சித்தர் வரலாறு

  By

  வரலாறு சுருக்கம்: பக்திலோகத்தில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சக்தி கணங்கள் ஆனந்தக்களிப்பில் இருந்தனர். அந்த நடனத்தை சக்திலோகத்தில் இருந்த...

Popular Articles

To Top