Connect with us

“கோடி கோடியாய் பணத்தைக் கொட்டித் தரும்..!” – கொட்டாங்குச்சி பரிகாரம்..!!

Clove, Kottaguchi Pariharam, positive energy, கிராம்பு, கொட்டாங்குச்சி பரிகாரம், நேர்மறை ஆற்றல்

Spirituality | ஆன்மிகம்

“கோடி கோடியாய் பணத்தைக் கொட்டித் தரும்..!” – கொட்டாங்குச்சி பரிகாரம்..!!

பூஜைக்கு என பல வகையான பாத்திரங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். அதைவிட மிகச் சிறந்த ஒரு பொருள் உள்ளது என்றால் அது கொட்டாங்குச்சி தான். தேங்காயில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த கொட்டாங்கச்சியை பயன்படுத்தி தான் நாம் இந்த பரிகாரத்தை செய்து கோடி கோடியாக பணத்தை அள்ள போகிறோம்.

பொதுவாகவே தேங்காயில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகள் குடியிருப்பதாக நம் மூத்தோர்கள் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தேங்காயில் இருக்கக்கூடிய தண்ணீருக்கு எதிர்மறை ஆற்றலை தகர்த்து எறிய கூடிய தன்மை இருப்பதால்தான் ஒவ்வொரு விசேஷங்களிலும் தேங்காயை முதலில் உடைத்து காரியங்களை நாம் துவங்கிறோம்.

Clove, Kottaguchi Pariharam, positive energy, கிராம்பு, கொட்டாங்குச்சி பரிகாரம், நேர்மறை ஆற்றல்

அது மட்டுமல்ல தேங்காயை உடைத்து துவங்கக்கூடிய காரியம் எல்லாமே வெற்றியைத் தரும் என்பது இந்து சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் ஒரு நம்பிக்கையாக உள்ளது. இப்போது தேங்காய் இருக்கும் கொட்டாங்கச்சியை வைத்து எப்படி பரிகாரம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேங்காய் துருவிய பிறகு கொட்டாங்கச்சியின் உள்பக்கத்தை நன்கு காய வைத்து மிச்சம் மீதி இருக்கும் தேங்காயை சுத்தமாக எடுத்து விடுங்கள். இந்த கொட்டாங்குச்சியை அப்படியே தரையில் வைத்தால் நிற்காது. எனவே அது சாய்ந்து விழாமல் அடியில் ஒரு கிண்ணம் வைத்துக் கொள்வது நல்லது.

இதையும் படிங்க :  " பித்ரு தோஷம் நீங்க தும்பை பூ மாலை..!" - உடனே சிவனுக்கு போடுங்க..!!

இப்போது இந்த சுத்தம் செய்யப்பட்ட கொட்டாங்குச்சியை கழுவி வெயிலில் உலர்த்திய பிறகு அதில் நீங்கள் ஒரு ஸ்பூன் எள், ஒரு ரூபாய் நாணயம், ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு அதன் மேலே இரண்டு ஏலக்காய், ஒரு கிராம்பு, அன்னாசிப்பூ இவற்றை அழகாக அடுக்கி உங்கள் வீட்டின் ஹாலில் வைத்து விடுங்கள்.

Clove, Kottaguchi Pariharam, positive energy, கிராம்பு, கொட்டாங்குச்சி பரிகாரம், நேர்மறை ஆற்றல்

இதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்க நேர்மறை ஆற்றல் உங்கள் வீட்டுக்குள் சங்கமிக்கும். மேலும் வீட்டுக்குள் சண்டை சச்சரவு வருவதற்கு இது இடம் தராது.

பொதுவாகவே உப்புக்கு எதிர்மறை ஆற்றல்களை நீக்கக்கூடிய சக்தி உள்ளது. மேலும் நீங்கள் இந்த கொட்டாங்குச்சியில் போட்டு இருக்கும் எள்ளானது சனி பகவானால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்க உதவி செய்யும்.

இதையும் படிங்க :  " வெள்ளிக்கிழமை கனகதாரா ஸ்தோத்திரம் படியுங்கள்...!" - ஐஸ்வர்யத்தை அள்ளுங்கள்..!!

 நீங்கள் வேண்டிக் கொண்டு போட்டிருக்கும் ஒரு ரூபாய் நாணயம் உங்கள் குல தெய்வத்திற்கானது. எனவே எந்த ஆபத்தையும் நீக்க உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டுக்கு வந்து உதவி செய்யும்.

Clove, Kottaguchi Pariharam, positive energy, கிராம்பு, கொட்டாங்குச்சி பரிகாரம், நேர்மறை ஆற்றல்

அதுமட்டுமல்லாமல் மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் உப்பு,கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ இந்த அனைத்து பொருட்களுமே பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி கொண்டது என்பதால் எதிர்மறை ஆற்றல்களை அழித்து நேர்மறை ஆற்றல்களை அதிகரித்து பணத்தை தட்டுப்பாடு இல்லாத அளவு அதிகப்படுத்தி சேமிப்பை உயர்த்த கூடிய ஆற்றல் கொண்டது.

மேற்கூறிய பொருட்களை நீங்கள் வாரம் ஒரு முறை மாற்றி வருவது சிறப்பாக இருக்கும். இந்த பரிகாரத்தை செய்து பார்த்து உங்கள் வீட்டில் பணப்புழக்கம் அதிகரித்து இருந்தால் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top