Spirituality | ஆன்மிகம்
“சகல பாவத்தையும் நீக்கும்..!”- அருகம் புல்லால் விநாயகருக்கு அர்ச்சனை செய்தாலே அதிர்ஷ்டம்..!
பஞ்சமா பாவங்கள் நீங்கள் செய்து இருந்தாலும் அந்தப் பாவங்களை எல்லாம் விரட்டி அடிக்க கூடிய சக்தி விநாயகப் பெருமானுக்கு நீங்கள் போடக்கூடிய ஒற்றை அருகம் புல்லால் கிடைக்கும் என்றால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும்.
ஆனால் இந்த அருகம்புல் ஒன்றைக் கொண்டு நீங்கள் விநாயகருக்கு அர்ச்சனை செய்தாலே போதும் தீராத கஷ்டமும் விரைவில் தீர்ந்துவிடும். கணக்கில் அடங்காத எண்ணற்ற பாவங்களை செய்யக்கூடிய மனிதன் அதிலிருந்து நிவாரணம் அடைவதற்காக இந்த அருகம்புல்லை பயன்படுத்தினால் போதும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
அருகம்புல்லைக் கொண்டு நீங்கள் அர்ச்சனை செய்வதால் உங்களுக்கு ஞானம், கல்வி செல்வம் இந்த மூன்றையும் வாரிக் கொடுப்பார் என்று புராணங்களில் செய்திகள் உள்ளது. புற்களிலேயே ராஜா என்று அழைக்கப்படுகின்ற எந்த அருகம்புல் விநாயகர் பெருமானுக்கு உரியது.
அது மட்டுமல்லாமல் இந்த அருகம்புல்லானது இந்திரனுடைய மணி முடிக்கு ஈடானது என்று புராணக் கதை கூட கூறியிருக்கிறது. இதனால் தான் இந்த அருகம்புல்லை கொண்டு நீங்கள் விநாயகரை தொடர்ந்து அர்ச்சிக்கும்போது நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும்.
அதுமட்டுமல்லாமல் முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தையும் நீக்கக்கூடிய ஆற்றல் எந்த அருகுக்கு உள்ளது.மேலும் இந்த பிறவியில் நீங்கள் செய்யும் பாவமும் நீங்கி உங்களுக்கு நற்கதி கிடைக்க வேண்டுமென்றால் தொடர்ந்து விநாயகர் பெருமானை நீங்கள் அருகால் அர்ச்சனை செய்து வாருங்கள்.
ஒரு சமயம் விநாயகருக்கும் அனலாசுரனுக்கும் ஏற்பட்ட போரில் அனலாசுரனை விநாயகர் அப்படியே விழுங்கி விடுகிறார். அவர் அந்த அசுரனை விழுங்கியவுடன் அவரது வெப்பமானது வயிற்றில் எரிச்சலை அதிகரித்தது.
விநாயகருக்கு அந்த வெப்ப தாக்கம் அதிகரித்ததின் காரணமாக குடம் குடமாக கங்கையிலிருந்து நீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்தும் எந்த ஒரு நிவாரணமும் கிடைக்கவில்லை.
அப்போது ஒரு ரிஷி விநாயகர் தலையில் அருகினை வைத்த பின்பு தான் அவரது வயிற்று எரித்தல் அடங்கி அசுரனை ஜீரணம் செய்தார். எனவே தான் அருகுக்கு அபாரமான சக்தி உள்ளது.
அதை வைத்து வழிபடுபவர்களுக்கு எளிதில் விநாயகர் வரத்தை அளிப்பார். எனவே கேது கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உரிய தேவதையான விநாயகர் பெருமானை நீங்கள் அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்வது மூலம் எண்ணற்ற பயன்களை பெற முடியும்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!