Connect with us

குழந்தை இல்லாத தம்பதிகள் நிச்சயம் செல்ல வேண்டிய கோயில்..! – உடனே கிடைக்கும் குழந்தை வரம்..!

getting progeny, Putlur Angala Parameswari Temple, Putlur Ramapuram, பிள்ளை பேறு, புட்டலூர் ராமாபுரம், புட்லூர் அங்காள பரமேஸ்வரி

Spirituality | ஆன்மிகம்

குழந்தை இல்லாத தம்பதிகள் நிச்சயம் செல்ல வேண்டிய கோயில்..! – உடனே கிடைக்கும் குழந்தை வரம்..!

பதினாறு வகை செல்வங்களில் மிக முக்கியமாக கருதப்படக்கூடிய செல்வமாக திகழ்வது பிள்ளை பேறு. இந்த பிள்ளை பேறு இல்லாதவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதோடு மட்டுமல்லாமல் வம்ச விருத்தி இல்லாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். மேலும் அவர்களின் மன கவலையை நீக்கி வீட்டில் மழலை சிரித்து விளையாடுவதற்கு பிள்ளை பாக்கியம் கொடுக்கும் கடவுளாக திகழும் புட்டலூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சுகப்பிரசவம் ஆவதற்கும் வழிபட வேண்டிய தெய்வமாக விளங்குகிறார்.

 இந்தக் கோயில் ஒரு வித்தியாசமான கோவில் என்று கூறலாம். ஏனென்றால் இங்கு காட்சி அளிக்கும் அம்மன் பார்ப்பதற்கு கர்ப்பிணிப் பெண் படுத்திருப்பது போல அருள் புரிகிறார். மேலும் பிள்ளை பேறு இல்லாதவர்கள் அந்த கோவிலில் இருக்கும் வேப்ப மரத்தில் எலுமிச்சம் பழம் மற்றும் தொட்டில் கட்டி மனம் உருகி வேண்டினால் கட்டாயம் பிள்ளை பேரு கிடைக்கும் என்று கூறுகிறார்கள் .

இந்தக் கோயில் ஆனது திருவள்ளூர்  மாவட்டத்தில் இருக்கும் புட்டலூர் ராமாபுரம் ஊருக்கு நடுவே இருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 38 கிலோமீட்டர் தொலைவிலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த கோயில் அமைந்திருக்கிறது.

இங்கு நிறைமாத கருவை சுமந்த வயிற்றுடன் வாய் திறந்து மல்லாந்து படுத்திருக்கும் நிலையில் இந்த அம்மன் இருப்பதால் இங்கு வந்து வழிபடும் பெண்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் இந்தக் கோயிலில் மூலவராக அங்காள பரமேஸ்வரி அம்மன் இருக்கிறார்.  விநாயகர், தாண்டவராயன் போன்ற சுவாமிகளும் இருக்கிறார்கள். மிகவும் பழமை வாய்ந்த அம்மன் திருக்கோயில் இது எனவே குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த கோயிலுக்கு சென்று தரிசித்து வந்தால் கட்டாயம் பிள்ளை பேறு கிடைக்கும்.

 அப்படி இந்தக் கோயிலுக்கு சென்றால் அவர்கள் பிள்ளை பாக்கியம் பெறுவதற்காக கோயிலில் இருக்கும் கிணற்றடியில் நீராடிவிட்டு ஈரத் துணியுடன் அம்மனை வணங்கி 11 முறை சுற்றி வழிபட வேண்டும் இவ்வாறு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்வதின் மூலம் அவர்கள் பிரார்த்தனை நிறைவேறும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top