Connect with us

நினைத்தாலே வரம் தரும் உறையூர் வெக்காளியம்மன்..!

Pongu saneeswarann, Uraiyur vekkaliamman, Uraiyur vekkaliamman History, உறையூர் வெக்காளியம்மன், உறையூர் வெக்காளியம்மன் வரலாறு, பொங்கு சனீஸ்வரன்

Spirituality | ஆன்மிகம்

நினைத்தாலே வரம் தரும் உறையூர் வெக்காளியம்மன்..!

இந்த கலியுகத்தில் வானத்தையே கூரையாக மாற்றி அமர்ந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வரும் உறையூர் வெக்காளியம்மன் பற்றி இன்றைய கட்டுரையில் விளக்கமாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

திருச்சியில் இருக்கும் உறையூரில் வீற்றிருக்கும் இந்த அம்மனை திருச்சி நகரின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு உள்ள உறையூர் செல்லும் பேருந்தில் சென்று நீங்கள்  அம்மனை தரிசிக்க முடியும்.

முற்காலத்தில் சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூரில் காவல் தெய்வமாக இந்த வெக்காளியம்மன் திகழ்கிறார். மேலும் இந்த அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து இருப்பதால் வீரத்தையும் வெற்றியையும் அருளக்கூடிய அம்சம் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

 உறையூர் வெக்காளியம்மன் மட்டும்தான் கருவறைக்குள் இல்லாத அம்மனாக வானமே கூரையாக கொண்டு வெட்ட வெளியில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள். மக்களுக்கு ஏற்படுகின்ற எண்ணற்ற துயர்களை துடைத்து பக்தர்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்கக்கூடிய சக்தி மிகு அம்மனாக வெக்காளியம்மன் இருக்கிறாள்.

 மேலும் இந்த கோயிலில் அருள்மிகு  காத்தவராயன் புலி வாகனத்துடன் பெரியண்ணன், மதுரை வீரன் சுவாமி போன்ற சுவாமிகள் சன்னதிகளும் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் நீங்கள் கோயிலில் தெற்கு வாயிலின் வழியாக கோயிலுக்குள் நுழைந்தால் முதலில் நீங்கள் வல்வ கணபதியை தரிசிக்கலாம்.

இதனை அடுத்து விசாலாட்சி அம்மன் மற்றும் விஸ்வநாதன் சன்னிதிகள் உள்ளது. இந்தக் கோயிலின் சிறப்பு என்னவென்றால் இங்கு இருக்கக்கூடிய நவகிரகங்களில் சனீஸ்வரன் பொங்கு சனீஸ்வரன் ஆக தரிசனம் தருகிறார்.

 எனவே எந்த பொங்கு சனீஸ்வரனை தரிசிக்க பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். வெக்காளி அம்மனிடம் தொழில் நஷ்டம், கடன் பிரச்சனை, குடும்ப பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகள் நீங்கவும் நோய் நொடி இல்லாமல் வாழவும் மக்கள் வேண்டுகோள்களை விடுத்து அம்மனின் ஆசியை பெற்று வருகிறார்கள்.

 இதற்காக பிரார்த்தனை சீட்டுகளை எழுதி கட்டுவது இங்கு வழக்கமாக உள்ளது. எண்ணிய பிரார்த்தனைகள் ஈடேறியதும் பக்தர்கள் கோயிலுக்கு சென்று அவர்கள் காணிக்கையை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோயிலில் தல விருச்சமோ, தல தீர்த்தமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top