Connect with us

“நன்மைகள் பல தரும் வில்வ இலை அர்ச்சனை..! ” சிவன் ராத்திரியில் நீங்களும் செய்யுங்க..!

Vilva leave, Vilva leaves in Siva Pooja, Vilvam Leaves Benefit, சிவ வழிபாட்டில் வில்வ இலை, வில்வ இலை, வில்வ இலை மகிமை

Spirituality | ஆன்மிகம்

“நன்மைகள் பல தரும் வில்வ இலை அர்ச்சனை..! ” சிவன் ராத்திரியில் நீங்களும் செய்யுங்க..!

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலை அர்ச்சனையினால் எண்ணற்ற பயன்களையும், நன்மைகளையும் பெற முடியும். இந்த வில்வ இலையானது திரிசூலத்தின் வடிவத்தைக் கொண்டு இருப்பதால்தான் மூன்று இலைகளைக் கொண்டு நாம் அதனை அர்ச்சனை செய்கிறோம்.இதில் இந்த மூன்று இலைகளுமே ஒரே காம்பில் இருப்பது தான் இதன் சிறப்பாகும்.

மேலும் மூன்று கண்களை உடைய முக்கண்ணனாம் சிவபெருமானுக்கு முக்குணங்களையும் குறிப்பதற்காக இந்த மூன்று இலைகள் கொண்ட வில்வத்தை நாம் அர்ச்சனை செய்யலாம்.

Vilva leave, Vilva leaves in Siva Pooja, Vilvam Leaves Benefit, சிவ வழிபாட்டில் வில்வ இலை, வில்வ இலை, வில்வ இலை மகிமை

சிவன் கோயில்களில் பொதுவாக இந்த வில்வ மரம் தல விருச்சமாக விளங்குகிறது. மேலும் வில்வத்தில் பல வகைகள் உள்ளது. குறிப்பாக மகாவில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என்று பலவகை வில்வங்களைக் கொண்டு நாம் சிவனை அர்ச்சனை செய்யும் போது நமக்கு முக்தி நிலை கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

இதையும் படிங்க :  " பித்ரு தோஷம் நீங்க தும்பை பூ மாலை..!" - உடனே சிவனுக்கு போடுங்க..!!

மேலும் மூன்று இதழ்களைக் கொண்ட வில்வத்தை தான் நாம் பூஜையில் பயன்படுத்துகிறோம். இவை தவிர ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் கொண்ட வில்வ மரங்களும் உள்ளது.

Vilva leave, Vilva leaves in Siva Pooja, Vilvam Leaves Benefit, சிவ வழிபாட்டில் வில்வ இலை, வில்வ இலை, வில்வ இலை மகிமை

 நீங்கள் பூஜைக்கு வில்வத்தை பயன்படுத்த விரும்பினால் அதை சூரிய உதயத்திற்கு முன்பாகவே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும் . அத்தோடு சிறிதளவு நீரை தெளித்த பின்பு தான்  வில்வத்தை நீங்கள் அர்ச்சனை செய்ய துவங்க வேண்டும்.

 மகா சிவராத்திரி நாளில் சிவனுக்கு வில்வாஷ்டகம் பாராயணம் செய்து வில்வத்தை பூஜைக்கு பயன்படுத்தும் போது ஏழேழு ஜென்மங்களாக நாம் செய்துவரும் பாவங்கள் மற்றும் சகல வினைகளும் நீங்கும் என்பது பெரியோர்களால் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :  "இதையெல்லாம் செய்யுங்க உங்க வீட்டுக்கு..!" - மகாலட்சுமி ஓடோடி வருவாள்..!!

Vilva leave, Vilva leaves in Siva Pooja, Vilvam Leaves Benefit, சிவ வழிபாட்டில் வில்வ இலை, வில்வ இலை, வில்வ இலை மகிமை

இந்த வில்வத்தை நீங்கள் சோமவாரம், அம்மவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் செய்வதற்காக பறிக்கக் கூடாது.

 மேலும் வில்வத்தை ஆறு மாதங்கள் அப்படியே வைத்து பூஜித்தாலும் பலன் கிடைக்கும். இந்த வில்வ அர்ச்சனை கோடி புண்ணியத்தை மனிதர்களுக்கு கொடுப்பதால் மறக்காமல் இந்த சிவராத்திரியில் நீங்கள் ஒரு வில்வத்தை போட்டாலே உங்களுக்கு பல கோடி புண்ணியங்கள் வந்து சேரும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top