Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

விண்னை தொட்டிடலாம்… வா… பெண்னே…

womens

Life Style | வாழ்வியல்

விண்னை தொட்டிடலாம்… வா… பெண்னே…

womens

பெண்னே உன்னை விண்ணளவு உயர்த்தும் சாவி தான் தன்னம்பிக்கை. பேராற்றல் மிக்க ஒரு இனம் உண்டு என்றால் அது பெண் இனம் தான் என்பதை புரிந்து கொள்.

பெண்னே இது தான்  உன் பாதை… இது தான் உன் பயணம் என முடிவு செய்து விட்டால் நீ உன் மனதோடு  உறவாடு பின் உன் கனவோடு உறவாடு.

அவ்வாறு உறவாடும் போது தான் உனக்கு ஏற்படும் சிரமங்கள் ஓடும். நீ உறவாடிக் கொண்டு போனால்  சிறிது தூரத்தில் தெரியும் ஒளிமயமான காலம் விரைவில் உன் காலடியில்…. பெண்னே.

கரணம் தப்பினால் மரணம் என நீ அஞ்சவேண்டாம்.  முன்னேறு! முன்னேறு எனும் வார்த்தைகள் உன்னை உற்சாகம் செய்யும், உற்சாகத்தை அள்ளித்தரும். நீ  உனக்கு போடப்பட்ட இரும்பு சங்கிலிகளை  இலவம் பஞ்சாய் மாற்றக்கூடிய திறன் படைத்தவள்.

உன் சோர்வையும், சோம்பேறித்தனத்தையும் தூர எறிந்துவிடு. சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் விடாமுயற்சியும் உன் கனவை நினைவாகி தடைகளை தவிடு பொடியாக்கும். 

womens

எட்ட முடியாத உயரத்தை  எட்டிப்பிடிக்கும் ஏணியாய் கூட நீ பலருக்கு உதவி செய்யலாம். உன்னால் நிச்சயம் முடியும் எனும் நம்பிக்கை  உனக்குள் எப்போதும் இருக்கவேண்டும். 

உன்  நம்பிக்கையை செயல்படுத்த திட்டமிடுவதும் அதை நிறைவேற்ற முயற்சி செய்யும்போது தடைகளைக் கண்டு தளர்ந்து விடாமல் விடாமுயற்சியுடன் அந்த காரியத்தை சாதிக்கும் திசையை நோக்கி முன்னேறுவது தான் முக்கியம். 

நீ எதையும் வெல்ல வேண்டுமென்றால் “ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு”  காத்திருத்தல் வேண்டும். காத்திருத்தல் என்பது சுலபமான ஒன்றல்ல. நீ மந்த நிலையில் இருந்து விடக்கூடாது..

“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும்” எனும் கண்ணதாசனின் வரிகளை எண்ணிப் பார்க்கும்போது நீ வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பதை அனுபவப்பூர்வமாக கற்றுக் கொள்ளும்போது தான் எதிர்நீச்சல் அடித்து வெற்றி அடைய முடியும்.

womens

“சாவுக்கே சவால்” எனும் நாவலை எழுதியவருக்கு  இரண்டு கைகளும் இல்லை. பற்களால் பேனாவை பிடித்து இந்த நாவலை அவர் எழுதியுள்ளார். கால் விரல்களைப் பிடித்து எழுதுவதைவிட கடுமையானது உதடுகளில் பேனாவைப் பிடித்து எழுதுவது. எண்ணற்ற மொழிகளில் அச்சேறிய எந்த நாவல்  தன்னம்பிக்கைகாரர்களுக்கு ஒரு நல்ல உதாரணம்.

பெண்கள் எப்போதும் எவரையும் எதிர்பார்த்து வாழக் கூடாது. எவருக்கும் நாம் பாரமாகவும் வாழக்கூடாது. நமக்கு கிடைத்தது போதும் என்ற வாழ்க்கையே சிறப்பானது.வெற்றி கிடைக்கும் வரை கடுமையாக உழைக்கவேண்டும்.அப்படி செய்தால் வெற்றியை தடுக்க யாராலும் முடியாது.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Life Style | வாழ்வியல்

 • carrot malli carrot malli

  Food Recipes | சமையல் குறிப்புகள்

  கேரட் மல்லி சட்னி

  By

  வித விதமான சட்னிகளை நாம் சாப்பிட்டிருப்போம். அந்த வரிசையில் கேரட் கொத்தமல்லி சட்னி மிகவும் சிறப்பான ஆரோக்கியமான சட்னி என்று கூறலாம்....

 • uric uric

  Health | உடல்நலம்

  உடல் நலம் காக்கும் முடக்கத்தான் கீரை.

  By

  மூட்டு வலியை சரிசெய்யும் இயற்கை மருத்துவம் குணம் கொண்ட முடக்கத்தான் கீரை. இந்தியாவில் சுமார் 65 சதவிகித மக்கள்  மூட்டு வலியினால்...

 • SNAIL SNAIL

  Food Recipes | சமையல் குறிப்புகள்

  நத்தை கிரேவி

  By

  மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நத்தையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. தமிழகத்தில், தஞ்சை மற்றும் அதிராம்பட்டினம் பகுதியான மகிழங்கோட்டை, மழவேனிற்காடு,கருங்குளம், கீழத்தோட்டம் ஆகிய...

Popular Articles

To Top