Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ஒரே வார்த்தை.. ஒட்டு மொத்த ரசிகர்களையும் கண்ணீர் விட வைத்த நடிகர் லிவிங்ஸ்டன்..!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி பிரபலமாக பார்க்கப்பட்டவர் லிவிங்ஸ்டன்.

இவர் பல்வேறு திரைப்படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தான் வெகு சீக்கிரத்திலே மக்கள் அறியப்பட்ட நடிகராக பார்க்கப் பட்டார்கள்.

நடிகர் லிவிங்ஸ்டன்:

குறிப்பாக 1988 பூந்தோட்ட காவலர் திரைப்படத்தில் தான் முதன்முதலாக லிவிங்ஸ்டன் நடித்திருந்தார்.

அதன் பிறகு 1996 ஆம் வருடத்தில் சந்திர புருஷன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

--Advertisement--

இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய இவர் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து 14 வருடங்கள் சிறு சிறு வேடங்களில் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான சுந்தர புருஷன் படத்தில் ஹீரோவாக நடித்தார்.

அந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு விரலுக்கு ஏற்ற வீக்கம்,

சொல்லாமலே, என் புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட பல்வேறு சில திரைப்படங்களில் ஜீரோவாக நடித்தது மட்டுமில்லாமல்,

பிரபல நடிகர்களின் படங்களில் லிவிங்ஸ்டன்;

துணை கதாபாத்திரங்களிலும் பல வெற்றி படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகராக பார்க்கப்பட்டார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர், கதை ஆசிரியர், சின்னத்திரை நடிகர் என தனக்கு கிடைத்த,

வாய்ப்புகளை ஒன்று விடாமல் பயன்படுத்திக் கொண்டு அதன் மூலம் தனது அடையாளத்தை தேடிக்கொண்டார்.

குறிப்பாக இவர் விஜய்,விஜயகாந்த், அஜித் ,பிரசாந்த், ஜெயம் ரவி ,தனுஷ், உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹீரோக்களின் படங்களில் நடித்து,

குணசித்திர நடிகராகவே நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்த் தனக்கு செய்த மாபெரும் உதவி பற்றி பேசியுள்ளார்.

ஆம், நடிகர் லிவிங்ஸ்டன் சமீபத்திய ஒரு பேட்டியில் கேப்டன் விஜயகாந்த் படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து பேசி ரசிகர்களை கண்ணீர் விட வைத்துள்ளார்.

விஜயகாந்த் செய்த உதவி:

அவர் கூறியதாவது, முதன் முதலில் கேப்டன் படத்தில் நான் ஒப்பந்தம் ஆன போது என்னை அழைத்து கேப்டன் கையாலேயே எனக்கு 5 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார்.

அப்போது, விஜயகாந்த் இடம் நான் ஒரு கோரிக்கை வைத்தேன் சார் முதன்முறையாக என் வாழ்நாளில் ஐந்து லட்சம் ரூபாய் அட்வான்ஸ் தொகையாக வாங்குகிறேன்.

எனக்கு ஒரு சிறு உதவி செய்ய முடியுமா..? என்று கேட்டேன் என்ன உதவி சொல்லுங்க செஞ்சிடலாம் என கேட்டார்.

சார் எனக்கு 500 ரூபாய் கட்டுகளுக்கு பதிலாக 100 ரூபாய் கட்டுகளாக கொடுத்தால் சந்தோஷமாக இருக்கும் என கூறினேன்.

என்ன சொல்றீங்க இதுதான் உங்களுக்கு ஹேண்டில் பண்றதுக்கு ஈசியா இருக்கும் என கூறினார். இல்ல சார், நான் என் அம்மாவிடம் ஒரு நாள் கூறினேன்.

சினிமாவில் நான் லட்ச லட்சமாய் சம்பாதிக்க போகிறேன்.. அதை நீ பார்க்க தான் போகிறாய்.. என்று. ஆனால் இன்றுவரை என் அம்மா ஒரு கயிற்று கட்டிலில்தான் படுத்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்காக நான் எதையுமே இதுவரை செய்யவில்லை. எனக்கு 100 ரூபாய் கட்டுகளாக கொடுத்தால்.. அது நிறைய பணம் இருப்பது போல தெரியும்.

ஒரு 50 கட்டுகள் வரும். அது அப்படியே கொண்டு போய் என் அம்மாவிடம் காட்டினாள் அவர்கள் மிகுந்த சந்தோஷப்படுவார்கள்.

அம்மா மீது பண மூட்டை கொட்டி அழகுபார்த்த லிவிங்ஸ்டன்:

அந்த பணத்தை கொண்டு போய் அப்படியே என் அம்மா மீது கொட்ட வேண்டும் என கூறினேன். இதைக் கேட்ட கேப்டன்.

மறு வார்த்தையே பேசாமல் தன்னுடைய உதவியாளரை அழைத்து பேங்குக்கு போயிட்டு 100 ரூபாய் கட்டு.. 50 கட்டு கேட்டேன்னு சொல்லி வாங்கிட்டு வாங்க கூறி அனுப்பினார்.

ஒரே மணி நேரத்தில் எனக்கு 50… 100 ரூபாய் கட்டுகள் கிடைத்தது. அதை ஒரு மூட்டையில் போட்டு எடுத்துட்டு சென்றேன்.

கிட்டத்தட்ட அரை மூட்டை பணம் நான் வைத்திருந்தேன். எப்படி செல்கிறீர்கள் என்று கேட்டார். நான் என்னுடைய வண்டியில் செல்கிறேன்.

இருசக்கர வாகனம் தான் வைத்திருந்தேன். இதில் நான் சென்று விடுகிறேன் என கூறினேன்… உடனே.. வேண்டாம் வேண்டாம் எனக் கூறி ஒரு ஆட்டோவை வரச் சொல்லி என்னை ஆட்டோவில் ஏற்றி அமைத்து அனுப்பி விட்டு.

உங்க வண்டி பின்னாடியே வரும் பத்ரமா போங்க என்று அனுப்பி வைத்தார். நான் என் அம்மாவிடம் சென்று.. இங்க பாரூம்மா.

நான் ஒரு நாள் நான் லட்ச லட்சமா சம்பாதிப்பேன் சொன்னேன்.. ஞாபகம் இருக்கா..? என கேட்டேன். என் அம்மாவும் ஆமா.. ராசா அதுக்கு என்ன இப்போ..? என்று கேட்டார்.

அப்படியொரு சந்தோசம் எதிலும் அனுபவிக்கல:

அப்படி சொன்ன அடுத்த நிமிடமே அந்த பண மூட்டையை அவிழ்த்து என் அம்மா முன்பு பொத பொதவென கொட்டினேன்.

அப்போது என் அம்மாவின் முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்தபோது.. எனக்கு கிடைத்த சந்தோஷம்.. இது நாள் வரை நான் எதிலுமே அனுபவித்ததில்லை என பேசி இருக்கிறார்.

இவருடைய அந்த பேச்சை கேட்டு ரசிகர்கள் உங்களுடைய இந்த கதை எங்களுக்கு கண்ணீர் வர வைத்து விட்டது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top