தன் போட்டோவுக்கு மோசமான கமெண்ட்.. கேப்ரில்லா கொடுத்த பதிலடியை பாருங்க..!

தன் போட்டோவுக்கு மோசமான கமெண்ட்.. கேப்ரில்லா கொடுத்த பதிலடியை பாருங்க..!

குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானவர் தான் கேப்ரில்லா சார்ல்டன். இவர் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த 3 திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் .

கேப்ரில்லா சார்ல்டன்:

அதற்கு முன்னதாக இவர் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு ஜோடி நம்பர் ஒன் ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

தன் போட்டோவுக்கு மோசமான கமெண்ட்.. கேப்ரில்லா கொடுத்த பதிலடியை பாருங்க..!

அதை எடுத்து ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த இரண்டு நிகழ்ச்சியிலும் வெற்றியாளராக இவர் அறிவிக்கப்பட்டார்.

இதனிடையே திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்ததை அடுத்து 3 படத்தை தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் மற்றும் அப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் முகமறியப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் கிளாமரான உடைகளை அணிந்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

அந்த நிகழ்ச்சி மேலும் அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கணக்கென தனி ரசிகர்களை உருவாக்கிக் கொண்டு பிரபலமானார் .

சீரியல்களில் வாய்ப்பு:

தன் போட்டோவுக்கு மோசமான கமெண்ட்.. கேப்ரில்லா கொடுத்த பதிலடியை பாருங்க..!

இதனுடையே சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க தொடங்கியது ஈரமான ரோஜாவே தொடரில் கேப்ரில்லா காவியா என்ற ரோலில் நடித்த எல்லோரது கவனத்தை ஈர்த்தார்.

இந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் பெயரும் புகழும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

தொடர்ந்து அடுத்தடுத்து சீரியல் நடித்துக் கொண்டே தனது சமூக வலைத்தளங்களில் எப்போதும் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

அந்த வகையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றுக்கு மிகவும் கொச்சையான கமெண்ட் செய்த நபர் ஒருவருக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

மோசமான கருத்திற்கு பதிலடி:

அதில் அவர்… நான் எந்த உடை அணிந்தாலும் அதற்கு எதிர்மறையாகவே கருத்துக்கள் வருகிறது.

தன் போட்டோவுக்கு மோசமான கமெண்ட்.. கேப்ரில்லா கொடுத்த பதிலடியை பாருங்க..!

சேலை அணிந்தாலும் சரி… டி ஷர்ட் அணிந்திருந்தாலும் சரி… இப்படியெல்லாம் கமெண்ட் பண்றவங்க பண்ணிக்கிட்டு இருப்பாங்க.

அதனால நான் இதுபோன்ற மோசமான கருத்துக்களுக்கு பதில் கொடுப்பதில்லை. அதை பெரிதாக ஏற்றுக் கொள்வதுமில்லை என கேப்ரில்லா சார்ல்டன் மிகவும் கூலாக பதில் கொடுத்திருக்கிறார்.

கேப்ரில்லா முன்னதாக தான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அப்பா வாங்கி கொடுத்த ஒரு குட்டி ஒன்று ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு சென்றேன்.

அதை மோசமாக சித்தரித்து ஆபாசமாக காட்டி இணையத்தில் லீக் செய்து மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி விட்டு விட்டார்கள்.

அதனால் நான் பள்ளிக்கு போவதற்கு மிகவும் அசிங்கமாக நிர்வாணமாக இருப்பது போல் உணர்ந்தேன். அது எனக்கு மிக மோசமான அனுபவம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.