மாதம்பட்டி ரங்கராஜ் அழாகான மனைவியை பாத்திருக்கீங்களா..? இதோ புகைப்படம்..!

சமையல் கலை வல்லுநரான மாதம்பட்டி ரங்கராஜ் கோவையில் உள்ள மாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர். இவர் “பாகசாலா” என்ற பெயரில் கேட்டரிங் தொழிலில் நடத்தி வந்தார்.

இந்த தொழிலை அவரது தந்தை கையில் எடுத்து நடத்தி வந்தார். மிகப்பெரிய சமையல் குடும்பத்தை சேர்ந்தவரான இவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சமையல் கலையில் பயணித்து வருகிறார்கள்.

மாதம்பட்டி ரங்கராஜ்:

குறிப்பாக ஊர்களில் நடக்கும் திருமணம், காதுகுத்து போன்ற சின்ன சின்ன விசேஷங்களுக்கு சமையல் செய்து கொடுத்து அசத்தி வந்தார்.

இவரது சமையல் வித்தியாசமாகவும், அறுசுவைகள் நிறைந்ததாகவும் இருந்ததால் மிகக் குறுகிய காலத்திலேயே பிரபலமாகிவிட்டார்.

--Advertisement--

இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன விசேஷங்களுக்கு சமையல் செய்து வந்ததை அடுத்து பிரபலங்கள் வீட்டு கல்யாணம் ,வீட்டு விசேஷம் என இவருடைய சமையல்தான் தற்போது பிரதானமாக காணப்பட்டு வருகிறது.

சமையல் கலையில் அசத்தும் ரங்கராஜ்:

இதனால் மிக குறுகிய காலத்திலேயே மாதம்பட்டி ரங்கராஜ் மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். குறிப்பாக விஜய்யின் அரசியல் மீட்டிங், சங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் இப்படி பல பிரபலங்களின் வீட்டுக்கு சமையல் செய்து கொடுத்து அசத்தி வந்தார்.

இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகவில்லை என்றாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக 2020ல் வெளிவந்த பெண் குயின் திரைப்படத்தில் நடித்திருந்தார் மாதம் பட்டினங்கராஜ்.

இதனிடையே அவர் தனது சொந்த தொழில் அதிக கவனம் செலுத்தி மிகக்குரிய காலத்திலேயே பிரபலமாகிவிட்டார்.

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

குறிப்பாக இவர் வெங்கடேஷ் பட் போன பிறகு அந்த இடத்திற்கு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி நடுவராக ரங்கராஜ்:

பார்ப்பதற்கு ஹீரோ லுக்கில் ஹேண்ட்சம் ஆக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் ஒட்டுமொத்த இளம் பெண் ரசிகைகளின் ஃபேவரட் நடுவராக தற்போது அனைவரது மனதிலும் இடத்தை பிடித்திருக்கிறார் .

இந்த நிலையில் தற்போது மாதம் பட்டிய ரங்கராஜின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாக அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இதில் அவரது மனைவி மிகவும் அழகாக ஸ்லிம் பிட் தோற்றத்தில் ஹீரோயின்களுக்கு செம டஃப் கொடுக்கும் வகையில் அழகில் அசத்து இருக்கிறார்.

அவரின் இந்த லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் எல்லோரும் இதனை ஷேர் செய்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.