கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் மதுர பட நடிகை ரக்ஷிதா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?. இவர் ஒரு மிகச்சிறந்த நடிகையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் தனது பங்களிப்பை தந்து ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற்றவர்.
நடிகை ரக்ஷிதாவின் தந்தை கௌரிசங்கர் ஒரு மிகச்சிறந்த சினிமட்டோகிராபர் என்பதால் திரையுலகில் நடிகையாக மாறுவது சற்று எளிதான விஷயமாகத்தான் இவருக்கு இருந்தது.
பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட இவர் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் இளநிலை பட்டத்தை பெங்களூரில் இருக்கும் பகவான் மகாவீர் ஜெயின் காலேஜில் படித்த சமயத்தில் திரை வாய்ப்பு கிடைத்ததை அடுத்து பட்டப்படிப்பை நழுவ விட்டார்.
பம்பரக்கண்ணு பச்ச மொளகா..
ஸ்வேதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் அப்பு என்ற திரைப்படத்தில் 2002 ஆம் ஆண்டு நடிப்பதற்காக புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆன நிலையில் திரை உலக பிரவேசத்திற்காக இவரது பெயரை ரக்ஷிதா என்று மாற்றிக் கொண்டார்.
கன்னட திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இவர் தெலுங்கு திரைப்படமான இடியட் என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து பல திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவர் பல படங்களில் தனது திறமையை நிரூபித்ததை அடுத்து தமிழில் 2003 ஆம் ஆண்டு டம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவரோடு இணைந்து சிலம்பரசன் நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.
இதைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு மதுர படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பெருமளவு ரிச் ஆன இவர் இந்த படத்தில் அனிதா என்ற கேரக்டரை பக்குவமாக செய்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.
சினிமா படங்கள் மட்டுமல்லாமல் அரசியலிலும் களம் இறங்கிய இவர் 2014 ஆம் ஆண்டு பிஜேபியில் சேர்ந்ததை அடுத்து ஊடகங்கள் கலவை ரீதியான விமர்சனங்களை செய்தது. இதற்கு காரணம் மூன்று அரசியல் கட்சிகளில் இரண்டு ஆண்டுகளில் ஒரு கட்சியை விட்டு இன்னொரு கட்சியை தேர்வு செய்ததை அடுத்து இவரை பார்ட்டி ஹாப்பர் என்று அழைத்தார்கள்.
மதுர பட நடிகை..
இந்நிலையில் சினிமா துறையில் பிஸியாக இருந்த சமயத்தில் 2007 ஆம் ஆண்டு திரைப்பட இயக்குனரான பிரேமை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்ட இவர் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கிறார்.
ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி புகைப்படங்களை வெளியிட்டு வரக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்த இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரை காணுகின்ற ரசிகர்கள் தற்போது உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறி உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் அட இது நம்ம மதுர பட நடிகை ரக்ஷிதாவா என்ற கேள்விகளை எழுப்பி இருப்பதோடு இப்படி யாரும் இவரை இந்த கோலத்தில் இருப்பார்கள் என்று துளி கூட கற்பனை செய்து பார்க்கவில்லை என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.
இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
அட இப்படியா உடல் எடை தாறுமாறாக குண்டாக்கி காட்சி அளிக்கிறார் என்று ஷாக்கில் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இவரது புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மதுர பட நாயகியின்புகைப் படம் தற்போது எப்படி இருக்குன்னு பாருங்க என்று சொல்லி இருக்கிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் கண்களை கசக்கி கொண்டே பார்ப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் பார்த்த ரக்ஷிதா அடியோடு தற்போது மாறி இருக்கும் புகைப்படங்கள் தான் இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தில் அம்மணி ஆள் அப்படியே மாறி இருப்பதோடு உடல் எடையும் அதிகரித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படங்களை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தில் இருப்பது உண்மையில் மதுர பட நாயகியா என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.