பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ்பாபுவின் அன்பு அம்மா இந்திரா தேவி மரணம்!

 தெலுங்கு திரைப்பட உலகில் மிக பிரம்மாண்ட முறையில் நடித்து பல வெற்றி படங்களை தந்த மகேஷ்பாபுவின் அம்மா நேற்று மரணமடைந்து விட்டார். இந்த நிகழ்வைக் கேள்விப்பட்ட  தெலுங்கு திரைப்பட உலகமே ஸ்தம்பித்து நின்றது.

 மகேஷ்பாபுவின் அப்பாவும் தெலுங்கில் புகழ்பெற்ற நடிகர் தான் ஆரம்ப காலத்தில் இவர் அப்பாவான  கிருஷ்ணாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்ட மகேஷ்பாபு  ராஜாகுமாருடு  படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அதன்பின் முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி ஆகிய திரைப்படங்கள்  பாக்ஸ் ஆப்பிஸ் வெற்றியை தந்தது.பின்னர் ஒக்கடு திரைப்படம் கில்லி என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக்கப்பட்டது. இதில் தளபதி விஜய் நடித்து வசூலை அள்ளியது. அது போலவே போக்கிரி படமும் இதே பெயரில் தமிழாக்கப்பட்டது. மகேஷ் ஆறு நந்தி விருதுகளையும்,இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

 இவரது தாயார் பெயர் இந்திரா தேவி இவர் சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இதனையடுத்து இந்திராதேவி செப்டம்பர் 28 அன்று அதிகாலை 4 மணிக்கு ஹைதராபாத்தில் காலமானார்.

மேலும் இந்திரா தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த  சில பிரபலங்களில் மெகாஸ்டார் சிரஞ்சீவியும் ஒருவர்.  தெலுங்கில் அவரது ட்வீட், “திருமதி இந்திரா தேவியின் அகால மரணச் செய்தி கேட்டு வருத்தமளிக்கிறது. அன்னையின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா, சகோதரர் மகேஷ் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்  என கூறியிருந்தார்.

---- Advertisement ----

மேலும் பல திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் அம்மாவின் இறப்புக்கு  ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள் வரக்கூடிய இந்த சூழ்நிலையில் மகேஷ்பாபு மிகவும் சோகத்திற்கு உடலாக இருப்பதால் ரசிகர்கள் அவர் சோகத்தில் இருந்து விரைவில் வெளிவர இறைவனை பிரார்த்திப்பதாகவும் அம்மாவின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பலர்  கூறிவருகிறார்கள்.

இந்திராதேவியின் உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  அவரது இறுதி சடங்குகள் மகாபிரஸ்தானில் நடைபெறும்.  மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

---- Advertisement ----