“தூங்கும் போது இயக்குனர் பார்த்த வேலை..” – இனி இந்தியாவுக்கே வரமாட்டேன் என கதறும் “சாட்டை” மஹிமா நம்பியார்..!

நடிகை மஹிமா நம்பியார் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது இயக்குனர் செய்த வேலையால் கடுப்பாகி ஒரு பதிவை எழுதி இருக்கிறார். இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அசிங்கம் இனிமேல் நான் இந்தியாவுக்கு வரப்போவதில்லை என்று கூறியிருக்கிறார் நடிகை மஹிமா நம்பியார்.

என்ன நடந்தது..? என்று வாருங்கள் பார்க்கலாம். நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை மஹிமா நம்பியார் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது நடிகை மகிமா நம்பியார் அசந்து தூங்கி இருக்கிறார்.

கடுமையான படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் மிகவும் சோர்வாக இருந்த நடிகை வாயை பிளந்தபடி நன்றாக தூங்கிக் கொண்டிருக்கிறார்.

எம்மாம் பெரிய உலக அழகியாக இருந்தாலும் வாயை பிளந்து கொண்டு தூங்கும் போது சற்று விகாரமாக இருப்பது ஒன்றும் அதிசயமான விசயம் இல்லை.

இந்நிலையில், தூங்கி கொண்டிருந்த மஹிமா-வுக்கு அருகில் அமர்ந்திருந்த பிரபல தமிழ் படம் தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சி எஸ் அமுதன் அவர் வாயை பிளந்து கொண்டு தூங்குவதை அப்படியே வீடியோவாக பதிவிட்டு இணையதள வெளியிட்டு இருக்கிறார்.

மேலும், என்னுடைய படக்குழு எந்த அளவுக்கு தீவிரமாக வேலை செய்கிறார்கள் பாருங்கள் என்று அதற்கு கேப்ஷன் வேரு வைத்திருக்கிறார்.

இதனை பார்த்தத நடிகை மஹிமா நம்பியார். இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அசிங்கம். நான் இந்தியாவுக்கு திரும்பி வரப்போவதில்லை.. என்று செல்லமாக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடைய இந்த பதிவுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …