மாளவிகா மோகனன் அடுத்த படம் – ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..!

மாளவிகா மோகனன்மலையாள திரைப்படத்தின் மூலம்  தமிழ் திரை உலகிற்கு வந்து சில தமிழ் படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனுக்கு நீண்ட ஆண்டுகளாக மலையாளத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.

தமிழில் மாளவிகா மோகன்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில்  நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து மிக நல்ல பெயரை சம்பாதித்துக் கொண்டார்.மேலும் இந்த படத்தில் இவரது நடிப்பு சொல்லும்படியாக இருந்ததாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதனைதொடர்ந்து தளபதி விஜய் படமான  மாஸ்டர் படத்தின் மாஸ் காட்டும் வகையில் இவரது நடிப்பு இருந்தது. அத்தோடு இவர் நின்றுவிடவில்லை  அடுத்ததாக இவர் நடிகர் தனுஷின் படமான மாறன் படத்தில் மிக நேர்த்தியான முறையில் நடித்து தமிழ் ரசிகர்களின் வட்டத்தை  மிகவும் பெரிதாகி வளர்த்து கொண்டார்.

இவர் நடிப்பில் தேவையென்றால் கிளாமர் காட்டுவதிலும் தயங்காமல் எது தேவையோ அதை தாராளமாக கொடுத்து நடித்தார். 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த  படத்துக்கு பின் வெறும் 2 மலையாள படங்களில் மட்டுமே மாளவிகா மோகன் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது அற்புதமான மலையாள பட வாய்ப்பு ஒன்று இவர் கதவை தட்டி இருக்கிறது. இந்த படத்திற்கான பூஜையும் நேற்று போடப்பட்டது. இந்த படத்தில் ஹீரோவாக பாலிவுட் நடிகர் சாஹித் கபூர் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தண்ணீர் மாத்தன் தினங்கள் படம் மூலம் கவனம் ஈர்த்த இளம் நடிகர் மேத்யூ தாமஸ் தான் இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கஉள்ளார் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கேரள சினிமாவில் முக்கியமான எழுத்தாளர்களான இந்துகோபன் மற்றும் ஆடுஜீவிதம் நாவலை எழுதிய பென்யமின் இருவரும் இணைந்து இந்த படத்திற்கு கதை எழுதி உள்ளனர். இந்தப் படத்தை ஆல்வின் ஹென்றி இயக்க உள்ளார்.

இந்த படத்தின் கதையானது இளம் வயதில் நடக்கின்ற நிகழ்வுகளை மையமாக கொண்டு இருக்கும் என்று இயக்குனர் கூறினார். மேலும் மாளவிகா மோகன் இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் அவருக்கு எந்த படம் திருப்புமுனையாக அமைவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …