மாளவிகா,(Malavika) தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகை. 20 ஆண்டுகளுக்கு, பலரது கனவுக்கன்னி இவர்தான். கிறங்கடிக்கும் பார்வை, கன்னக்குழி சிரிப்பு, உதட்டுச் சுழிப்பில் ரசிகர்களை உசுப்பேற்றிய நடிகை. இவரது உண்மையான பெயர் ஸ்வேதா கோனூர். சினிமாவுக்காக மாளவிகா என மாற்றிக்கொண்டார். இவர் மாடலிங் துறையில் இருந்தார். எண்ட் லவ்லீ மாடல் ஆக, இருந்திருக்கிறார். தமிழ் இந்தி தெலுங்கு மொழிகளில் பல படங்களில் மாளவிகா நடித்திருக்கிறார்.
தமிழில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், உன்னைத்தேடி படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே முன்னணி நடிகர் அஜித் குமாருடன் நடிக்கும் வாய்ப்பு, கிடைத்தது. படமும் வெற்றி பெற்றதால், மாளவிகா, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அடுத்து, சூர்யா நடித்த பேரழகன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் மாளவிகா நடித்தார். இதுவும், நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல், டைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி என்ற படத்தில், ‘வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ பாடலில் நடனடமாடி அனைவரையும் கவர்ந்தார். முதன் முதலில், கதாநாயகி அந்தஸ்தில் இருந்த நடிகை, ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடும் கலாசாரத்துக்கு முதலில் வித்திட்டவர் மாளவிகா தான். அம்மணி, மஞ்சள் சேலையில் இந்த பாட்டு செம குத்தாட்டம் போட்டிருப்பார். இப்போதும், இந்த பாடலுக்கு, ரசிகர்கள் மத்தியில் செம கிராக்கி தான்.
அடுத்து, கமல் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் சிநேகாவின் தோழியாக நடித்திருந்தார். ரோஜாவனம் படத்தில், கார்த்திக் ஜோடியாக நடித்தார். இயக்குநர் சேரன் இயக்கத்தில் வெற்றிக்கொடி கட்டு படத்தில், முரளிக்கு ஜோடி இவர்தான். கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாக பேசப்பட்டார். அடுத்து ரஜினிகா்ந்த் நடித்த சந்திரமுகி படத்திலும், இவருக்கு நல்ல கேரக்டர் கிடைத்தது, வியாபாரி, திருமகன் படங்களிலும் நடித்திருந்தார். மாளவிகா நடிப்பில் திருட்டுபயலே படம், அதிக கவனத்தை ஈர்த்து, மெகா வெற்றி பெற்ற படம். அடுத்து, சீ யூ எட் 9 என்ற பாலிவுட் படத்திலும் அவர் நடித்திருந்தார்.
நடிகை மாளவிகா, அழகான நடிகையாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். சில படங்களில், அபாரமான கவர்ச்சி காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சில படங்களில், சில காட்சிகளில் மட்டுமே வந்து போனாலும், மாளவிகாவின் ரசிகர்கள் அவர் நடித்த அந்த சில காட்சிகளுக்காகவே படம் பார்க்க வந்தனர்
என்பது குறிப்பிடத்தக்கதுசினிமாவில், தன் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்ட மாளவிகா, கடந்த 2007ம் ஆண்டில் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு, குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார், மாளவிகா – சுமேஷ் மேனன் தம்பதிக்கு ஆரவ் என்ற மகனும், ஆன்யா என்ற மகளும் உள்ளனர்.
மாளவிகா, சோஷியல் மீடியாவில் ஆர்வமாக இருக்கிறார். அதனால் அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை, அப்டேட் செய்து வருகிறார். இன்னும் பழைய அழகும், இளமையும் மாறாமல், மாளவிகா அப்படியே இருக்கிறார். இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பிறகும், தன் உடல் அழகை, வசீகரத்தை அவர் நல்ல முறையில் பாதுகாத்து, பராமரித்து வருகிறார். அதற்கு அவர் மேக்கப் சாதனங்களை மட்டுமே நம்புவதில்லை. அதையும் தாண்டி உடல் ஆரோக்கியம் சார்ந்த சில விஷயங்களை, பின்பற்றுகிறார் என்பதை, இப்போது அவர் அப்டேட் செய்துள்ள புகைப்படங்கள் உறுதிபடுத்துகின்றன.
மாளவிகா, பலவிதமான முறைகளில் யோகாசனம் செய்யும் புகைப்படங்களை, அவர் பதிவிட்டுள்ளார். 40 வயது கடந்தும், உடலை வளைத்து, நெளித்து பல கோணங்களில், அவர் ஆசனங்களை செய்வதை பார்த்து ரசிகர்கள் அசந்து போயிருக்கின்றனர்.