மாடலிங் துறையின் மூலமாக சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகை கனி குஸ்ருதி. 2019 இல் வெளியான கேரளா கஃபே திரைப்படத்தின் மூலமாக இவர் அதிக வரவேற்பு பெற்றார். மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார் கனி.
கேரளா கஃபே திரைப்படம் எதனால் அவருக்கு முக்கிய திரைப்படம் என்று பார்த்தால் அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக அதிக பாராட்டை பெற்றது. அதில் அவரது தனிப்பட்ட நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. கனி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தவர் ஆவார். இளம் வயதிலேயே சமூக ஆர்வலராகவும் பகுத்தறிவாளராகவும் இவர் இருந்தார்.
கனி குஸ்ருதி
அதற்கு முக்கிய காரணம் அவரது தந்தையும் ஒரு பகுத்தறிவாளர் என்று கூறப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு இவர் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு திருச்சூரில் உள்ள நாடகப்பள்ளி ஒன்றில் சேர்ந்தார். அங்கு அவர் நடிப்பதற்கு கற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் இவருக்கு மலையாள திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது 2003 ஆம் ஆண்டு மலையாள படத்தில் நடித்திருந்தார் இருந்தாலும் 2009இல் இவர் நடித்த கேரளா கஃபே திரைப்படம்தான் இவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. அதற்கு பிறகு மலையாளத்தில் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார்.
மேலாடை இல்லாமல்
தமிழில் இவருக்கு பிசாசு திரைப்படத்தில் முதன்முதலாக வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். பிறகு பர்மா என்கிற திரைப்படத்திலிருந்து இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து நிறைய தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டு தடயம், டச், ஸ்பைடர் மாதிரியான திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார். இந்த நிலையில் மலையாளத்தில் 2020 ஆம் ஆண்டு இவர் நடித்த பிரியாணி என்கிற திரைப்படத்திற்காக விருதுகளையும் வாங்கினார்.
இதுக்காக தான்
மிக முக்கிய திரைப்படமாக இந்த திரைப்படம் மலையாளத்தில் அப்பொழுது பேசப்பட்டு வந்தது. இயக்குனர் சஜின் பாபு இயக்கிய இந்த திரைப்படம் பல நாடுகளில் திரையிடப்பட்டு அதிக வரவேற்பை பெற்ற படமாக இருந்தது. இந்த நிலையில் பிரியாணி படத்தில் ஒரு காட்சியில் மேலாடை இல்லாமல் படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்பொழுது அந்த பிரியாணி படத்தில் நடிப்பதற்கு எனக்கு விருப்பமே இல்லை. ஆனால் என்னிடம் அப்பொழுது பணம் இல்லை என அந்த இயக்குனரிடம் முன்பே கூறியுள்ளேன். இந்த படத்தில் நடித்தால் எனக்கு 70 ஆயிரம் ரூபாய் சம்பளமாக தருவதாக அவர் கூறினார்.
அப்பொழுது அது எனக்கு பெரிய தொகையாக இருந்தது. ஏனெனில் எனது கணக்கில் அப்பொழுது 3000 ரூபாய் மட்டுமே இருந்தது. எனவே அந்த சம்பளத்திற்கு நான் அதில் நடித்தேன் என்று அவர் கூறியிருக்கிறார் கனி குஸ்ருதி.