மலையாள தேசத்து பசங்கள கிரங்கடிக்க வைக்க மலையாள படத்துல நடிக்க போறாங்க தமன்னா.

 2005 இல் ஒரு ஹிந்திப் படத்தில் அறிமுக நாயகியாக தோன்றிய தமன்னா தமிழ் திரையுலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். இதன் பின்னர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் போன்ற படங்களில் நடித்து பெரும்பாலான இளைஞர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். சிந்தி வம்சாவளியைச் சேர்ந்த இவர் மும்பையில் உள்ள பள்ளியில்  படித்தவர். தமிழ் இந்தி கன்னடம் தெலுங்கு போன்ற படங்களில் நடித்திருந்தாலும் மலையாளப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அமையாமல் இருந்தது.

ஆனால் அந்த வாய்ப்பு இப்போது இவருக்கு கைகூடி வந்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஆம். நடிகர் திலீப் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னால் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி 3 மாதம் சிறை தண்டனையை அனுபவித்து இருந்தார். இவர் சிறையில் இருந்தபோதுதான் ராம்லீலா என்ற படமும் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் இவர் 100 கோடிக்கு மேல்  லாபம் அடைந்தார்.

திலீபன் தனது படத்திற்கு அருண் கோபியை வைத்து இயக்குவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார். இந்த படம் திலீபனின் நூற்றி நாற்பத்து ஏழாவது படமாக பிரம்மாண்டமாக வர இருக்கிறது. 

இந்த படத்தில் தான் திலீபனுடன் தமன்னா கைகோர்க்கிறார். இதன் மூலம் இவர் முதன் முதலாக மலையாள பட உலகில் அடியெடுத்து வைக்கிறார்.

இந்தப் படத்துக்கான பட பூஜை நேற்று செப்டம்பர் 1 அன்று நடைபெற்றது இதில் தமன்னா திலீபனுடன் சேர்ந்து கலந்துகொண்டார்.

---- Advertisement ----

நெருக்கடிகளை சந்தித்த திலீபன் தனது  ராம்லீலா படத்தின் மூலம் மீண்டும் திரையுலகத்திற்கு ஒரு கம்பேக் கொடுத்து இருக்கிறார். தற்போது இவருடைய 147-வது படத்திற்கான திரைக்கதையை கதாசிரியர் உதயகிருஷ்ணா தான் எழுதுகிறார். இவர் புலி முருகன் என்ற படத்திற்கு கதை எழுதிய ஆசிரியர் தான் . இசையமைப்பாளராக சாம் சி.எஸ்  இந்தப் படத்துக்கு இசையமைப்பார்.

பல மொழிகளில் நடித்து விட்ட தமன்னா மலையாள மொழிகளில் நடிக்க துவங்கி இருப்பதால் மலையாள ரசிகர்களின் மனதைக் கவர்ந்து விடுவார் நிச்சயமாக அவருக்கு அந்த அதிர்ஷ்டம் நிறையவே இருக்கிறது. படம் வெளிவந்தபின் தமன்னாவின் நடிப்பை மலையாத்தில் எப்படி இருக்கிறது என்று காணலாம்.

---- Advertisement ----