அட…மாலத்தீவு போய் இருக்காங்க நம்ம அமலா பால்… இனி ஹாட் போட்டோஸ் க்கு குறைச்சல் இருக்காது!

முதல் முறையாக நம் அமலாபால் 17 வயதில் மலையாள திரையுலகில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார். அதன்பின் தனது படிப்பை கூட பெரிதாக நினைக்காமல் நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினார். இவருக்கு தமிழில் வெளிவந்த மைனா படம் மிகச்சிறந்த பெயரை பெற்று தமிழ் திரை உலகில் பயணம் செய்ய வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.மலையாளம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தனக்கென்று ஒரு இடத்தையும் ரசிகர் பட்டாடையும் பெற்றிருப்பவர் அமலாபால்.

 பிரபுசாலமன் இயக்கிய அந்த படத்தில் இவர் கதாநாயகியாக வெற்றி பெற்றதை அடுத்து பல தமிழ் பட வாய்ப்புகள் அவர் கதவைத் தட்டியது. இதனை தொடர்ந்து இவர் தலைவா படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக இணைந்து நடித்தார். அப்போது தான் அந்த பட இயக்குனர் ஏ.எல்.விஜய் உடன் காதல் ஏற்பட்டது.

 பின்னர் 2014ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்ட முறையில் நடந்தது. இது நீண்ட நாட்கள் நிலைக்க வில்லை.மிக விரைவில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

 இதைத்தொடர்ந்து இவர் பற்றிய கிசுகிசுக்கள் இன்றுவரை வெளி வந்த வண்ணமாகவே இருக்கிறது. இவருக்கு காதலன் இருக்கிறார் என்றும் இரண்டாவது திருமணம் நடந்து விட்டது என்றும் பல வகைகளில் இவரை பற்றிய விமர்சனங்கள் சமூக வலைதளங்களிலும் எழுகிறது.

எனினும் இவர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வித்தியாசமான துணிச்சல் மிக்க கேரக்டர்களை இன்றுவரை செய்துதான் வருகிறார். அதற்கு உதாரணமாக 2019-ம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை என்ற படத்தில் நிர்வாணமாக நடித்ததை  கூறலாம்.

தற்போது மற்ற நடிகைகளை போல மாலத்தீவுக்கு சென்றுள்ள அமலாபால் அங்கு கடற்கரையில் பல விதமான போஸ்களில் நின்று புகைப்படத்தை எடுத்திருக்கிறார். மேலும் அந்த முகத்தை புகைப்படத்தை இன்ஸ்டால் பதிவிட அதை பார்த்த ரசிகர்கள்  போட்டோ ஸ்வீட் அமலாபால் என்று புகழ்கிறார்கள்.

தற்போது வைரலாகி வரும் இந்த போட்டோக்களை  நீங்களும் பார்த்து உடனடியாக கமெண்ட் செய்யுங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …