மீண்டும் இணையும் சரத்குமார் – மம்முட்டி..! – வேற லெவல்..! எக்குதப்பாக எகிற எதிர்பார்ப்பு..!

 மலையாளத்தில் வெளிவந்த வரலாற்று படமான பழசிராஜா படத்தில் மம்முட்டி இணைந்து சரத்குமார் நடித்திருந்தார். இந்தப் படம் 2009 இல் வெளி வந்தது அந்த படத்தில்  நடிகர் மம்முட்டிக்கு சேனாதிபதியாக நடிகர் சரத்குமார் நடித்திருந்தார் இவரது நடிப்பைப் பார்த்த மலையாள திரை உலகம் அவருக்கு நிறைய பாராட்டுக்களை அப்போதே தெரிவித்தார்கள்.

 எப்போதும் தமிழில் பிஸியாக இருக்கக்கூடிய சரத்குமார் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் குறிப்பாக இவர் ஹீரோ ரோல் மட்டும் பண்ணுவதில்லை ஆன்ட்டி ஹீரோ ரோல் பண்ணுவதோடு மட்டுமல்லாமல் சிறப்பு தோற்றத்திலும் இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது தமிழ் திரையுலகில் அதிக படங்களை வைத்திருக்கக்கூடிய நடிகர் யார் என்று கேட்டால் அது சரத்குமார் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு இவரிடம் தற்போது நிறைய படங்கள் கைவசம் இருக்கிறது.

 மேலும் இவர் பெரிய பழுவேட்டரையர் ஆக நடித்துள்ள பொன்னியின் செல்வன்  அறைக்கு வரை இருக்கக்கூடிய சூழ்நிலையில் இவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்று கூறலாம்.

 பழசிராஜா வுக்கு பின்னால் இவர் 2014 ஆஷா பிளாக் என்ற படத்தில் நடித்திருந்தார் சுமார் எட்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் மலையாளத்தில் நடிகர் மம்முட்டி இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு இப்போது கைகூடி வந்துள்ளது.

 இப்படத்தில் இவர் சிறப்பு வேடத்தில் தோன்றி நடிப்பார் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளது அது தற்போது மலையாளத்தில் படம் பிடிக்கப்பட்டு வரும் கிறிஸ்டோபர் என்கிற படம் தான். இந்தப்படத்தை மோகன்லாலின் பிரதான இயக்குனரான பி. உன்னிகிருஷ்ணன் என்பவர் இயக்கி வருகிறார். இயக்கத்தில் பல மலையாள வெற்றி படங்கள்  வந்துள்ளது.

 இதனைத் தொடர்ந்து கிறிஸ்டோபர் படத்தில் இவர்  சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என்ற விஷயத்தை கேள்விப்பட்ட மம்முட்டி மற்றும் சரத்குமாரின் ரசிகர்கள் மிகவும் ஆவலாக அது எந்த மாதிரியான கேரக்டர் என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

விரைவில் படக்குழு அதற்கான பதிலை தருவார்கள் என என்ற நம்பிக்கையில் சரத்குமாருக்கு வாழ்த்துக்களை அவரது ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …