அது எப்படி அய்யய்யோ ஆகும்..? – பொன்னியின் செல்வன் கதையை திரித்து மாட்டிக்கொண்ட மணிரத்னம்..! – விளாசும் ரசிகர்கள்..!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்று கூறலாம். அதேசமயம் இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தில் ஏகப்பட்ட திரிபுகளை செய்திருக்கிறார் இது பொன்னியின் செல்வன் நாவல் மற்றும் பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கும் செய்யக்கூடிய துரோகம் என்ற ஒரு பேச்சும் கிளம்பியிருக்கிறது.

கடவுள் மறுப்பாளராக இருக்கும் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திட்டமிட்டு ஹிந்து மதம் சார்ந்த விஷயங்களை மறைக்க முயற்சி செய்திருக்கிறார் என்பது படத்தின் டிரெய்லர் உள்ளிட்ட சில காட்சிகள் மூலம் தெரியவருகிறது.

முழு படம் வெளியான பிறகு மணிரத்னம் எந்த அளவுக்கு நேர்மையாக இந்த திரைப்படத்தை எடுத்து இருக்கிறார் என்று ஒரு முடிவுக்கு வரலாம் என்ற பேச்சு கிளம்பி இருக்கிறது.

இப்போதைக்கு, இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற கதாபாத்திரம் தீவிர பெருமாள் பக்தர் மற்றும் வீர வைஷ்ணவர் என்று தன்னை அடிக்கடி அடையாளப்படுத்திக் கொள்ள கூடிய ஒரு கதாபாத்திரம்.

அய்யய்யோ என்று மாறிய நாராயணா..

படத்தின் டிரெய்லரில் ஒரு காட்சியில் வல்லவரையன் வந்தியத்தேவன் நடிகர் கார்த்தி, அருள்மொழி வர்மன் நடிகர் ஜெயம் ரவி ஆகியோருடன் ஆழ்வார்க்கடியான் நம்பி நடித்திருக்கும் ஜெயராம் ஆகியோர் ஒரு பாலத்தின் மீது குதிரைகள் பூட்டப்பட்ட குதிரை வண்டியில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகுவது போல காட்சி.

அந்த காட்சியில் பாலம் உடைந்து கொண்டிருக்கும் பொழுது மின்னல் வேகத்தில் செல்லும் குதிரை வண்டிக்கும் ஒரு அம்பு வந்து பாயும் அப்பொழுது ஆழ்வார்க்கடியான் நம்பி அய்யய்யோ என்று அலறுவது போல காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.

ஆனால் இதே பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஹிந்தி தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி டிரைலர்கள் அய்யய்யோ என்பதற்கு பதிலாக நாராயணா என்று அலறுவது போல காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

ஒரே படம், ஒரே காட்சி.. மொழி மாற்றம் செய்யும் போது எப்படி நாராயணா என்ற வார்த்தை அய்யய்யோ என்று மாறியது. இப்படி நுணுக்கமான காட்சியில் கூட கடவுளின் பெயர் இடம் பெற்றுவிடக்கூடாது என்று கண்ணூரும் முன்னூருமாக மணி ரத்தினம் வேலை பார்த்திருக்கிறார் என்றால்.. படம் முழுக்க எத்தனை வேலைகளை பார்த்திருப்பார் என்று பொன்னியின் செல்வன் நாவலின் ரசிகர்கள் பதறி வருகின்றனர்.

நாராயணா என்றால் தமிழில் அய்யய்யோ என்று அர்த்தமா..?

ஆனால் என்ன காரணத்திற்காக வசனத்தை மாற்றினார் இயக்குனர் மணிரத்தினம்..? ஆழ்வார்க்கடியான் நம்பி தீவிர பெருமாள் பக்தர் வீர வைஷ்ணவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள கூடிய ஒரு நபர். ஆனால் தமிழ் பதிப்பின் அய்யயோ என்றும் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பதிப்புகளில் நாராயணா என்றும் எதற்காக பதிப்பை மாற்றவேண்டும் பெருமாளே என்றால் தமிழில் ஐயையோ என்று அர்த்தமா…? என்ன காரணத்திற்காக மணிரத்தினம் அவர்கள் இந்த வசனத்தை மாற்றவேண்டும்.

மட்டுமில்லாமல் தீவிர சிவபக்தரான சோழர்களை நெற்றியில் திருநீறு இல்லாமல் காட்ட முயற்சிப்பது எந்தவகையில் பொருத்தமானதாக இருக்கும் என தெரியவில்லை. முழு படத்தையும் பார்த்த பிறகுதான் இயக்குனர் மணிரத்தினம் எந்த அளவுக்கு சித்து விளையாட்டுகளை செய்திருக்கிறார் என்று தெரியவரும் என்று பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர ரசிகர்கள் தங்களுடைய கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

கண்டிப்பாக இந்த திரைப்படம் வெளியான பிறகு பல சர்ச்சைகளை கிளப்பும் என்பது இப்போதே தெரிகிறது. ஆனால் இந்த சர்ச்சைகள் எல்லாம் படத்தின் வசூலுக்கு துணை நிற்கும் என்று படக்குழு நம்புகிறதோ..? எனவே தான் இப்படியான சர்ச்சைகளை வேண்டுமென்றே உருவாக்கியுள்ளார்களோ..? என்ற எண்ணமும் தோன்றுகிறது.

சர்ச்சையை தள்ளு.. பணத்தை அள்ளு..

பொதுவாக இப்படியான சர்ச்சைகளை எதிர் கொள்ளும் படங்கள் வசூல் ரீதியாக நல்ல வெற்றியைப் இருக்கின்றன. எனவே, வசூல் ரீதியாக படம் வெற்றி பெற வேண்டும்.. இந்த சமாச்சாரத்தை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.. என்று வம்படியாக இந்த திரிபுகளை செய்திருக்கிறார்களோ..? அல்லது தங்களுடைய சித்தாந்தத்தை மனதில் வைத்துக்கொண்டு படத்தில் இறைநம்பிக்கையை பெரிதாக பேசக்கூடாது என்ற ஒரு காரணத்தினால் இப்படி திரிபு செய்துள்ளார்களோ..?

இதை அனைத்தையும் இயக்குனர் மணிரத்தினம் தான் விளக்கவேண்டும். நிச்சயம் மணிரத்தினம் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று தங்களுடைய கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது..? இது திரைப்படமா..? திரிபு படமா..? என்பது அன்றே தெரிந்து விடும்..? என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருகிறார்கள் பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்கள்.

வரலாறு மன்னிக்காது மணி சார்..

பொன்னியின் செல்வன் ஒரு நாவல்.. மணிரத்தினத்தின் கதை அல்ல. நாவலை நாவல் போலவே அதன் தன்மை மாறாமல் படமாக எடுப்பது தான் ஒரு இயக்குனராக அந்த நாவலுக்கு மணிரத்தினம் கொடுக்க கூடிய அடிப்படை மரியாதையாக இருக்கும்.. அதை விட்டு விட்டு தன்னுடைய சித்தாந்தம்.. சுயலாபத்திற்காக படத்தில் திரிபுகளை செய்திருந்தால்.. அவர் மறைந்தாலும் வரலாறு அவரை மன்னிக்காது என்று கருத்துகளை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.