இயக்குனர் மணிரத்னம் சுஹாசினி மகனா இது..? பார்க்க ஹீரோ ரேஞ்சுல… செம ஹான்ட்சம்மா இருக்காரே..!

நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் நடிகை சுகாசினி. 1980களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சுஹாசினி.

இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிகரமாக ஓடியது இதற்கு காரணம் இவரது சிறந்த கதை தேர்வு தான். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். அதனாலேயே அக்கால கட்டங்களில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

இவர் நடிகர் சாருக்ஹாசனின் மகளும் ஆவார். இவர் நடித்த பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனச்சோலை, சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும் போன்ற திரைப்படங்கள் இவரின் சிறந்த நடிப்புக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

மேலும் இவர் இந்திரா என்னும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் அரசியல் பின்னணியை கொண்டதாக அமைந்தது. திரைப்படத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக முக்கியமாகக் கருதப்படுபவை தேசிய திரைப்பட விருதுகள்.

1954 இல் முதலில் வழங்கப்பட்ட இவ்விருதுகள் ஆண்டுதொறும், சிறந்த இயக்குனர், படம், நடிகர், நடிகை போன்ற பல பிரிவுகளில் வழங்கப் படுகின்றன. சிறந்த நடிகைக்கான தங்கத் தாமரை விருதைப் 1986 இல் சிந்து பைரவியில் நடித்ததற்காக பெற்றார்.

---- Advertisement ----

இவர் 1988-ல் இயக்குநர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நந்தன் என்னும் ஒரு மகன் உள்ளார்.

இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர், இவர் பல்லவி அணுப்பல்லவே என்னும் திரைப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமானார்.இயக்குனர்  அவர்கள் முன்னணி கதாநாயகர்கள் பலரை இயக்கி பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது இவரை இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்க அந்தக் காலம் தொட்டு இந்த காலம் வரை பலர் முயற்சித்து உள்ளார்கள் ஆனால் இக்கணவை நினைவாக்கியவர் இவர் ஒருவரே.

இயக்குனர் மணிரத்தினம் மற்றும் சுகாசினி தம்பதிக்கு நந்தன் என்னும் மகன் உள்ளார் ஆனால் அவரை எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து வந்ததில்லை. பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் கூட அவர் பங்கேற்கவில்லை ஆனால் தற்போது அவரது புகைப்படம் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

இப்ப புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவர்களுக்கு இவ்வளவு பெரிய மகனா பார்க்க நடிகர் போல உள்ளாரே என்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

---- Advertisement ----