பிரபல இளம் நடிகருடன் நடிகை மஞ்சிமா மோகன் ரகசிய திருமணம்..? – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.

இந்த திரைப்படத்தில் அழகு பதுமையாக இருந்த இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சட்டென பிடித்து போய்விட்டது. இந்நிலையில் பிரபல நடிகர் கௌதம் கார்த்திக்குடன் இவர் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் கௌதம் கார்த்திக் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.

இருந்தாலும் கடைசியாக இவர் நடித்த தேவராட்டம் திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனுடன் காதலில் விழுந்த கௌதம் கார்த்திக் கடந்த சில வருடங்களாக இருவரும் பரஸ்பரம் காதலித்து வருகின்றனர்.

சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில் இது குறித்து நடிகை மஞ்சிமா மோகன் கூறியதாவது இது முழுக்க முழுக்க ஒருவகையான கற்பனையான செய்தியாகும். என்னுடைய பெற்றோர் இந்த செய்தியால் மிகவும் மனமுடைந்து போய் இருக்கின்றனர்.

நாங்கள் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக பரவும் புகைப்படம் எங்கள் இருவரது நண்பரான கோபி என்பவரின் நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அவரது நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டபோது நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து நாங்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம் என்றும் திருமணம் செய்து கொள்கிறோம் என்றும் தகவல்கள் இணையத்தில் வைரலாகி கிடக்கின்றது.

இது முழுக்க முழுக்க பொய்யான ஒரு விஷயம் எனக்கும் கார்த்திக்கும் இடையே இருப்பது வெறும் நட்பு மட்டும்தான் என்று கூறியிருக்கிறார் நடிகை மஞ்சிமா மோகன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …