விதவிதமான போஸ்..! – இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை மஞ்சிமா மோகன்.!

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை மஞ்சிமா மோகன் ( Manjima Mohan ).

தமிழில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய, “அச்சம் என்பது மடமையடா’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், அந்த படத்தை தொடர்ந்து, ‘சத்ரியன்’, ‘இப்படை வெல்லும்’, ‘தேவராட்டம்’ என வரிசையாக பல படங்களில் நடித்தார்.

ஆனால், சிம்புவுடன் இவர் நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை தவிர மற்ற படங்கள், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை. எனினும் தற்போது இவரின் கைவசம், தமிழில் சில படங்களே உள்ளன.

மேலும் இவர் குண்டாக இருப்பதால், இவருக்கு கதை சொல்ல வந்த பல இயக்குனர்கள் உடல் எடையை குறைக்கும் மாறு கூறியதாக தகவல் வெளியானது.

இதனால் சாப்பாடு பிரியரான இவர் டயட் இருந்து தன்னுடைய உடல் எடையை குறைத்த நிலையில், மீண்டும் சும்மா கொழு மொழு நடிகையாக மாறியுள்ளார்.

தமிழில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ள எஃப் ஐ ஆர் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இப்போது கேரளா சேலையில் சொக்க வைக்கும் அழகில் மஞ்சிமா மோகன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

ஹிந்தியில் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் திரைப்படம் இப்பொழுது தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் மலையாளத்தில் இந்த படத்திற்கு ஜாம்ஜாம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் மிக விரைவிலேயே ரிலீஸாக உள்ளது.

மஞ்சிமா மோகன் முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.இவருடைய படங்களில் சிறிதும் கவர்ச்சி காட்டாமல் நடித்து இருப்பார்.

இந்நிலையில், கவுன் போன்ற உடையில் புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். மஞ்சிமா மோகனா இது என்று ரசிகர்கள் வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.

தொடர்ந்து வண்ண வண்ண உடைகளில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “நேச்சுரல் ப்யூட்டி – ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …