மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சுவாரியார். மம்முட்டி, மோகன்லால் நடித்த முக்கிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மஞ்சு வாரியார்.
மஞ்சு வாரியார்
சுமார் 15 ஆண்டுகள் வரை மலையாள சினிமாவை விட்டு காணாமல் போன மஞ்சுவாரியார், மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ரீ என்ட்ரி கொடுத்தது முதல் மிக நல்ல படங்களில், சிறந்த கேரக்டரில் நடித்து வருகிறார்.
இப்போது தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் மஞ்சுவாரியார் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அசுரன்
இவர் முதலில் தமிழில் நடித்த படம் அசுரன். நடிகர் தனுஷ், மஞ்சுவாரியார் நீண்டகால நண்பர்கள். பல படங்களில் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்ட நிலையில், அசுரன் படத்தில்தான் அது சாத்தியமானது.
கேரளாவை சேர்ந்த மஞ்சுவாரியார் சின்ன வயதில் நாகர்கோவிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருந்திருக்கிறார். அவரது அப்பா நாகர்கோவிலில்தான் பணிசெய்திருக்கிறார். அதனால் மஞ்சு வாரியார் தமிழில் மிக பிரமாதமாக பேசுவார்.
சிறந்த பாடகி
சிறந்த நடனக் கலைஞர். மிகச் சிறந்த பாடகி மஞ்சுவாரியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மஞ்சுவாரியாருக்கு சினிமாவில் நடிக்க ஆசையே இல்லாத நிலையில், அவரது அம்மாவின் விருப்பம் காரணாமாகவே நடிக்க வந்திருக்கிறார்.
திலீப்புடன் திருமணம்
அப்படி நடிக்க வந்த புதிதில் முதலில் திலீப் உடன் சில படங்களில் நடித்திருக்கிறார். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. பிறகு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். 2000ம் ஆண்டில், மீனாட்சி என்ற மகளும் பிறந்தார்.
இந்த சூழலில் மஞ்சுவாரியார், காவ்யா மாதவன், பாவனா ஆகிய மூவரும் நெருங்கிய தோழிகள். மூன்று பேருமே மலையாளத்தில் பிரபல நாயகிகளாக படங்களில் நடித்து வந்தனர்.
இதையும் படியுங்கள்: 200 கோடி செலவில் விஜயகுமாரின் பேத்தி திருமணம்.. வரதட்சணை மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?
காவ்யா மாதவன்
அப்போது திலீப்புக்கும், காவ்யா மாதவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். இதுகுறித்து அரசல் புரசலாக சில தகவல்கள் வெளியான போது, இது வழக்கமான வதந்திதான்.
சினிமாவில் சில படங்களில் நடிகர், நடிகை இணைந்து நடித்து விட்டால் இது சகஜம்தானே என மஞ்சுவாரியார் இருந்துவிட்டார்.
காட்டிக் கொடுத்த பாவனா
ஆனால் ஒரு கட்டத்தில் இதுபற்றிய முழு விவரங்களையும் அறிந்த பாவனா, தனது தோழி மஞ்சுவாரியாரிடம், திலீப் – காவ்யா மாதவன் நெருக்கம் குறித்து ஆதாரங்களுடன் காட்டிக்கொடுத்து நிரூபித்து விட்டார்.
இதையும் படியுங்கள்: கணவரை பிரிய காரணம் இது தான்..புட்டு புட்டு வைத்த நடிகை சமந்தா.
அதன்பிறகு உண்மையை உணர்ந்த மஞ்சுவாரியார், திலீப்பை விவாகரத்து செய்தார். அவரது மகள் மீனாட்சி, தந்தையுடன் இருந்து விடுவதாக கூறிவிட்டார்.
சக்காளத்தியான தோழி
காதல் திருமணம் செய்த கணவர் திலீப் விவாகரத்து, உடன் இருந்தே குழிபறித்த சக்காளத்தியான தோழி காவ்யா மாதவன், அப்பாவுடன் இருந்து விடுகிறேன் என முதுகில் குத்திய மகளால் பறிபோன வாழ்க்கை என வாழ்ந்து வருகிறார் மஞ்சு வாரியர்.
அவரது வாழ்க்கையில் மறுபக்கம் மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது.