‘அசுரன்’ திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மலையாள நடிகை ‘மஞ்சு வாரியர்’ ( Manju Warrier ) . இவர் நடித்த முதல் படமே, சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.மஞ்சு வாரியர் தனது 17 வயதில் இருந்து நடித்து வருகிறார்.
இவர் தனது 20வது வயதிலேயே மலையாள நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திலீப்புக்கு வேறு நடிகையுடன் இருந்த தொடர்பு காரணமாக இருவரும் 2014ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்து மீண்டும் பிஸி நடிகையாக நடித்து வருகிறார்.
மலையாளத்தில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர். அறிமுகமான காலகட்டத்தில் இருந்து மலையாள சினிமாவில் மட்டுமே நடித்துவரும் மஞ்சு வாரியருக்கு பலமுறை தமிழில் அழைப்புகள் வந்தும் அவர் அதை ஏற்கவில்லை என்றும் தமிழில் முதன்முறையாக தனுஷ் நடித்த அசுரன் படத்தில்தான் அவர் நடித்துள்ளார் என்றும் தான் ரசிகர்களுக்கு தெரியும்.
ஆனால் 2O வருடங்களுக்கு முன்பே தமிழில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி அந்தப்படத்தில் மஞ்சு வாரியர் சில நாட்கள் நடித்த விஷயம் பலருக்கும் தெரியாது.. ஆம். பிரபு, சுரேஷ்கோபி இணைந்து நடிக்க அமைதிப்பூங்கா என்ற பெயரில் பிரபல மலையாள இயக்குனர் சிபிமலயில் டைரக்ஷனில் ஒரு படத்திற்கு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் துவங்கப்பட்டது.
இந்தப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் திடீரென சுரேஷ்கோபி அந்த படத்திலிருந்து விலகிக் கொண்டார்.. அதன்பின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் சில நாட்கள் கழித்து அவருக்கு பதிலாக ஜெயராம் நடிக்க, நண்பா நண்பா என பெயர் மாற்றப்பட்டு சில நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது.
அதன்பிறகு சில காரணங்களால் படம் மேற்கொண்டு வளராமல் கிடப்பில் போடப்பட்டது.. அதற்குப் பிறகு தமிழ் நடிக்க வந்த வாய்ப்புகளை அவர் ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதே படத்தை மஞ்சு வாரியார், ஜெயராம், சுரேஷ்கோபி மற்றும் மோகன்லாலை வைத்து மலையாளத்தில் சம்மர் இன் பெத்லஹேம் என்கிற பெயரில் வெற்றிப்படமாக இயக்கினார் சிபிமலயில்.
இந்நிலையில்,தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.