என் அம்மா சாவுக்கு இதை போட்டுக்கிட்டு தான் போனேன்.. கூச்சப்படவே இல்ல..! – பிக்பாஸ் வனிதா ஓப்பன் டாக்..!

நடிகை வனிதா விஜயகுமார் பற்றி பெரிய அறிமுகம் தேவையில்லை. பல்வேறு சர்ச்சைகள், பல்வேறு திருமணங்கள் என தாண்டி தற்போது சின்னத்திரையில் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட அவர் தன்னுடைய அம்மா குறித்து சில ரகசியங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது, என்னுடைய அம்மா-வை பொறுத்தவரை பெண்கள் எப்போதுமே லிப்ஸ்டிக் போட்டிருக்க வேண்டும்.

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்க போகும் வரை லிப்ஸ்டிக் போட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் நாள் முழுதும் ஏன் லிப்ஸ்டிக் போடல.. ஏன் லிப்ஸ்டிக் போடல.. லிப்ஸ்டிக் போடு என நச்சிரித்து கொண்டே இருப்பார்.

மேலும், என் அம்மா எப்போதுமே ப்ரைட்டான பிங்க் கலர் அல்லது சிவப்பு கலரில் தான் லிப்ஸ்டிக் போடுவார். தினமும் லிப்ஸ்டிக் போடுவார். லிஸ்ப்டிக் போடாமல் என் அம்மா-வை நான் பார்த்ததே கிடையாது.

பெண்கள் என்றாலே லிப்ஸ்-டிக் போட்டிருக்க வேண்டும். அப்போது தான் அழகாக இருக்கும் என்ற எண்ணம் கொண்டவர் என் அம்மா.

அதனால், அவருடைய சாவுக்கு போகும் போது, யாராச்சும் ஏதாவது சொல்லிடுவங்க.. என்ற பயமோ, கூச்சமோ இல்லாமல்.. யாரு வேணா என்ன வேணா சொல்லிட்டு போங்க.. என்று என் அம்மா-வுக்கு பிடித்த ப்ரைட் பிங்க் கலர் லிப்ஸ்டிக் அவர்களுக்கு பிடித்த பிங்க் நிற உடையில் சென்று கலந்து கொண்டேன் என ஓப்பனாக பேசியுள்ளார் வனிதா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …