இயக்குனர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டிருக்கும் மனோபாலா [Manobala] தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தனது அசாத்திய திறமையை பதிவு செய்திருக்கிறார்.
மேலும் இவர் 700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் ஆரம்ப நாட்களில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக தனது பணியை கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.
இயக்குனராக இவர் 1982 ஆம் ஆண்டு வெளி வந்த ஆகாய கங்கை என்ற திரைப்படத்தில் தனது அற்புத திறமையை வெளிப்படுத்திய இவர் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த ஊர் காவலன், பிள்ளை நிலா, சிறைப்பறவை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.
இவரது நடிப்பை பொறுத்தவரை சந்திரமுகி, அரண்மனை, துப்பாக்கி, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் பல கோணங்களில் தனது நடிப்பை அற்புதமான முறையில் செய்து ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருக்கிறார்.
இறுதியாக இவர் இளைய தளபதி விஜய் உடன் இணைந்து லியோ படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் தயாரிப்பாளராக சதுரங்க வேட்டை உள்ளிட்ட சில படங்களை தயாரித்திருக்கும் இவர் youtube சேனல் மூலம் பிரபலகங்களை பேட்டி எடுத்து வந்தார்.
இதனை அடுத்து சமீபத்தில் லேசான மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் ஆஞ்சியோ சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
திரை உலகமே ஆழ்ந்த சோகத்தில் இவரது இழப்பை ஈடு செய்ய முடியாது என்று கூறிவரும் வேளையில் மனோபாலாவின் மகன் தனது அப்பாவையும் கடைசி நிமிடங்களில் பாடல்களைப் பாடி தேற்றக்கூடிய வீடியோ ஒன்று மனோபாலா லாஸ்ட் மொமெண்ட் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
இந்த வீடியோவில் மனோபாலாவுக்கு ஒருவர் உணவு, தண்ணீர் ஊட்டி விடுகிறார் இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கலக்கமடைந்திருப்பதோடு மனிதனின் வாழ்வு இவ்வளவுதான் எவ்வளவு புகழ் பெயர் இருந்தாலும் நாம் செய்யும் நன்மை தான் நமக்கு கடைசி வரும் கடைசி வரை வரும் என்பதை இது உணர்த்திவிட்டது.