A.R.ரஹ்மான் பதில் சொல்லியே ஆகணும்..! – கொடூரம் – கதறும் குழந்தைகள் – கொதிக்கும் ரசிகர்கள்..! – நடந்தது என்ன…?

Marakkuma Nenjam Musical Concert : சமீப காலமாக திரைபிரபலங்கள் நேரடி மேடை கச்சேரிகளை நடத்தும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.

கடந்த காலங்களில் வெளிநாடுகளில் தான் இப்படியான இசை கச்சேரிகள் நடைபெறும். ஆனால் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

ரசிகர்களும் 500, 1000, 2000, 5000, 50,000 என வகை வகையாக விற்கும் டிக்கெட்டுகளை தங்கள் வசதிக்கேற்ப வாங்கி தங்களுக்கு பிடித்த பிரபலங்களை நேரில் சந்தித்து அவர்களுடைய நிகழ்ச்சியை நேரில் பார்க்க ஆசையுடன் செல்கின்றனர்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த இரண்டு ஆண்டுகள் அளவில் தமிழ்நாட்டில் இந்த தொழில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்கள் மட்டும் இல்லாமல் சேலம், திருச்சி, ஈரோடு என பல்வேறு துணை நகரங்களிலும் இந்த கலாச்சாரம் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

Image Credit : News Tamil 24×7

பல்வேறு இசையமைப்பாளர்கள், பாடகர்கள், சீரியல் நடிகர்கள் நடிகைகள், திரைப்பட பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோகமான வரவேற்பு இருக்கிறது.

மறக்குமா நெஞ்சம்..

அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கலந்து கொள்ளக்கூடிய அவருடைய இசை நிகழ்ச்சி மறக்குமா நெஞ்சம் என்ற தலைப்பில் சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதமே நடந்த நடப்பதாக திட்டமிடப்பட்டது.

Image Credit : News Tamil 24×7

ACTC Events Chennai..

ஆனால் அப்பொழுது கடுமையாக மழை பெய்ததால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு இன்று செப்டம்பர் 10ஆம் தேதிக்கு இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது. இதனை Orchid Productions ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனமும், 5, AC Block 3rd St, Anna Nagar, Chennai, Tamil Nadu 600040 என்ற முகவரியில் இயங்கி கொண்டிருக்கும் ACTC Events என்ற நிறுவனமும் ஒருங்கிணைத்து இருக்கின்றனர்.

சென்னையில் இருக்கக்கூடிய ஆதித்யா ராம் பேலஸில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஐந்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் பலரும் வந்திருக்கின்றனர்.

Image Credit : News Tamil 24×7

ஆனால் இன்று மாலை முதல் அந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகே உள்ள சாலை கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

ஐந்து கிலோ மீட்டர் பாதயாத்திரை..

தொடர்ந்து தங்கள் வந்திருந்த கார்களை சாலையோரம் நிறுத்திவிட்டு ஐந்து கிலோ மீட்டர் வரை நடந்தே நிகழ்ச்சி நடக்கக்கூடிய இடத்திற்கு வந்திருக்கின்றனர் ரசிகர்கள். ஆனால் அங்கே கடுமையான கூட்ட நெரிசல் இருந்திருக்கிறது.

15000 பேர் மட்டுமே அமர்ந்து வேடிக்கை பார்க்கக்கூடிய ஒரு இட வசதியை வைத்துக்கொண்டு 50,000 மேற்பட்டோருக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது என்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பலரும் புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.

Image Credit : News Tamil 24×7

இந்த நிகழ்ச்சிக்கு குழந்தைகளை அழைத்து வந்த தாய்மார்கள் பலரும் கடுமையான கூட்டத்தில் சிக்கி அழுது இருக்கிறார்கள். ஒரு நூறு மீட்டர் இடைவெளியில் தன்னுடைய குழந்தைகளை பிரிந்த ஒரு தாய் அந்த குழந்தைகளிடம் நெருங்க முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல். உள்ளே சென்றால் மூச்சு கூட விட முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருக்கிறது.

Image Credit : News Tamil 24×7

இது திடீரென நடக்கும் ஒரு நிகழ்ச்சி கிடையாது. முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி. அப்படி இருக்கும் பொழுது சரியான முறையில் கார் பார்க்கிங் வசதி செய்து கொடுக்கவில்லை. பணத்தைப் பெற்றுக் கொண்டு சரியான இருக்கை வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை. உண்மையை சொல்லப்போனால் இது ஒரு மோசடி.

மோசடிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் சொல்ல வேண்டும்..

இந்த மோசடிக்கு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிறுவனமும். ஏ ஆர் ரஹ்மானும் பதில் சொல்லியாக வேண்டும் என்று அழாத குறையாக சாலைகளில் கதறிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்,

மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் இதற்கு என்ன பதில் கொடுக்கப் போகிறார்கள்..? என்று பார்க்க வேண்டும்.

Image Credit : News Tamil 24×7

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு எங்களிடம் பணம் பெற்று இருக்கிறார்கள். டிக்கெட் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் உள்ளே அனுமதிக்கவில்லை. எங்களுக்கான இருக்கைகளில் எங்களுக்கு இருக்கை கொடுக்கப்படவில்லை. எனவே எங்களுடைய பணத்தை அவர்கள் திருப்பி தர வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்திருக்கிறார்கள்.

இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …