2023-ன் மிகப்பெரிய SCAM.. இத்தனை கோடியா..? – மயக்கம் வருதுடா சாமி..! – சிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்..!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்ற இசை கச்சேரி நிகழ்ச்சி அது தொடர்ந்து நடந்த அட்டூழியங்கள் மிகப்பெரிய அதிர்வலைகளை நாடு முழுதும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற பல்வேறு மோசடிகள் அநியாயங்கள் குறித்த தகவல்கள் இணைய வட்டாரத்தில் பரவி வருகின்றன.

அதனுடைய தொகுப்பு தான் இது. பலருக்கும் இந்த நிகழ்ச்சியில் அதிகப்படியான டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டிருகிறது. டிக்கெட் எடுத்தவர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்ல முடியவில்லை என்ற சூழ்நிலை நிலவியது என்று தான் கேள்விபட்டிருப்பீர்கள்.

ஆனால் அதையும் தாண்டி பல கொடூரமான சம்பவங்கள் அந்த கூட்டத்தில் அடங்கியிருக்கிறது.

பல இளம் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது. இது ஒட்டுமொத்த பொது மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது.

மட்டுமில்லாமல் உள்ளே சிறுநீர் கழிக்க கூட வசதி இல்லை குடிக்க தண்ணீர் இல்லை என்று உள்ளே இருந்தவர்கள் பலரும் குரல் எழுப்பி இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து தண்ணீர் விநியோகம் நடந்திருக்கிறது. ஆனால் கொடுமை என்னவென்றால்.. ஒரு தண்ணீர் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை ₹60 முதல் ₹150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

வெளியே விற்கக்கூடிய 10 ரூபாய் சிப்ஸ் பாக்கெட்டுகள் உள்ளே 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் கிட்டத்தட்ட பத்து கோடிக்கும் மேல் முறைகேடான வருமானத்தை பார்த்திருக்கிறது இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிறுவனம் என் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையதள பக்கங்களில் குரல்கள் எழுந்து வருகின்றன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …