வாழ்க்கையின் வலிகளை படம் எடுத்து தமிழ் சினிமாவில் முத்தான இயக்குனராக பிரபலமாகி இருப்பவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ்.
இவரது இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் வாழை.
வாழை திரைப்படம்:
இந்த திரைப்படத்திற்கு பிரபல இயக்குனர்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறார்கள்.
இந்த படத்தில் கலையரசன், திவ்ய துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளியங்குளத்தை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த திரைப்படம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் உழைப்பை பற்றியும் அவர்களின் வறுமை துன்பம் போராட்டம் உள்ளிட்டவற்றை காட்டும் படமாக உருவாகி வெளியாகி இருக்கிறது.
இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்திருக்கிறது.
குறிப்பாக இப்படம் வெளியான வெளியான நாளிலே இயக்குனர் பாலா, ஷங்கர், மிஷ்கின் உள்ளிட்ட பல நட்சத்திர இயக்குனர்கள் வாழை படத்தை பார்த்து மிகவும் மன உருகி மாறி செல்வராஜை வாழ்த்தினார்கள்.
இதில் ஒரு படி மேலே சென்ற இயக்குனர் பாலா அவரை கட்டிப்பிடித்து கலங்கி எழுந்தார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியது.
மாரி செல்வராஜ்:
திரைப்பட எழுத்தாளராக தனது வாழ்க்கையை துவங்கிய மாரி செல்வராஜ் தாமிரபரணையில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதை தொகுப்பின் ஆசிரியராக தனது எழுத்தாளர் பணியை துவங்கி அதன் பிறகு உதவி இயக்குனராக இயக்குனர் ராம் இடம் பணியாற்றினார் .
பிறகு பத்திரிகைகளில் சில வருடங்கள் பணியாற்றி அதன் பிறகு திரைப்பட இயக்குனராக தனது பரிமாணத்தை தொடங்கினார் .
இவர் முதன் முதலில் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.
இந்த திரைப்படம் அந்த அளவுக்கு வலி வேதனை உள்ளிட்ட அனைத்தும் அடங்கும் வகையில் படம் எடுத்திருந்தார் .
இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக கர்ணன் மாமன்னன் உள்ளிட்ட தொடர் வெற்றி திரைப்படங்களை இயக்கினார்.
தற்போது கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் வாழை இந்த நிலையில் வாழை திரைப்படத்திற்காக மாரி செல்வராஜ் பட்ட கஷ்டங்கள் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.
முன்னதாக இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 10 கிலோவுக்கு மேல் இருக்கும் வாழைத்தார்களை சுமந்து என்னுடைய தோள்பட்டையில் பயங்கரமான வலி ஏற்பட்டதாக அப்ப அடுத்து ஹீரோயின் திவ்யா துரைசாமி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அதேபோல் படத்தில் ஹீரோவாக நடித்த கலையரசனும் ஒன்றுக்கும் மேற்பட்ட கிட்டத்தட்ட மூன்று வாழைத்தார்களை தலையில் ஒரே நேரத்தில் சுமந்து சென்ற வீடியோக்கள் வெளியாகி எல்லோருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணீர் விடாமல் தியேட்டரை விட்டு வெளியில் வரும் நபர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே காணப்பட்டது.
கேரக்ட்ராவே வாழ்ந்த மாரி செவ்ராஜ்:
அந்த அளவுக்கு அந்த வலியை அவ்வளவு உணர்த்தி இருந்தார் மாரி செல்வராஜ். இந்த நிலையில் படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இதில் சிறுவனாக நடித்திருக்கும் ராகுல் உள்ளிட்ட நடிகர்களுக்கு சிறப்பான நடிப்பை வர வைக்க வேண்டும் என்பதற்காக வாழை தோப்புகளுக்கு இடையில் சிறுவர்கள் ஓடிவரும் அந்த காட்சியில் மிகவும் பர்ஃபெக்டாக வரும் வகையில் மாரி செல்வராஜை இறங்கி நடித்து காட்டி இருப்பார் .
அதில் வாழை மரங்களின் வாய்க்கால் இடையில் இடறி விழுவது போன்ற காட்சியில் மாரி செல்வராஜ் நடித்து காட்டியிருக்கிறார் .
அதில் சலனுமே இல்லாமல் விழுந்து கிடக்கும் காட்சியும் அவர் அவ்வளவு தத்ரூபமாக நடித்துக் காட்டுகிறார்.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அந்த காட்சியை மீண்டும் காண்பது போன்ற ஒரு தாக்கத்தை அவரது நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார் மாரி செல்வராஜ் .
இந்த படத்திற்காக இவ்வளவு உழைத்து கஷ்டப்பட்டு இருக்கிறார். அதன் உழைப்பின் பலன் தான் படத்தின் வெற்றியாக தற்போது பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ: