மாரி செல்வராஜ் ( Mari Selvaraj ) இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து வரும் படம் மாமன்னன் ( Mamannan ). இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார்.
இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் ஃபகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதையும் படிங்க : கீழே ஒண்ணுமே போடாமல்.. தொடைக்கு நடுவில் கேமராவை வைத்து.. உச்ச கட்ட கவர்ச்சியில் கிரண்..!
இந்த நிலையில் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார்.
முதற் கட்டப் படப்பிடிப்பானது சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. கர்ணன் படத்தைப் போல மாமன்னன் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருவதாக கூறப்படுகிறது.
முதல் கட்ட ஷுட்டிங் நிறைவடைந்ததை முன்னிட்டு படக்குழுவினர் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த போட்டோக்களை மாரி செல்வராஜ் மட்டுமின்றி ரெட் ஜெயின்ட் மூவிசும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
இதை பார்த்து விட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இதெல்லாம் உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியலியா. படம் வெற்றி பெற்றால், படத்தின் ஷுட்டிங் நல்லபடியாக முடிந்தால் அந்த சந்தோஷத்தை கொண்டாட கேக் வெட்டலாம்.
முதல் கட்ட ஷுட்டிங் முடிந்ததற்கே இப்படியா. அப்போ படம் மொத்தமாக முடிந்தாலோ, பட ரிலீஸ், படத்தின் வெற்றிக்கு என்ன செய்வீர்கள் என கேட்டு கலாய்த்து வருகிறார்கள்.