வாலி -யில் இந்த காட்சி அஜித் பண்ணியிருந்தா வேற மாறி இருந்திருக்கும்.. ஆனா..! – மாரிமுத்து உடைத்த ரகசியம்..!

மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகர் மாரிமுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் உடன் வாலி படத்தில் நடித்த போது ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

படத்தின் கதையின் படி கதாநாயகி அண்ணன் யார்..? தம்பி யார்..? என்று தெரியாமல் ஒரு குழப்பத்தில் இருப்பார். அந்த குழப்பத்தை போக்கும் விதமாக ஒரு காட்சி படத்தில் அமைக்கப்பட்டது.

அதாவது, தன்னுடைய மனைவிக்கு தன்னை அடையாளம் கண்டு கொள்வதில் பிரச்சனை ஏற்படுவதால் மீசையை எடுத்து விடலாம். இனிமேல், மீசையே வேண்டாம் என முடிவெடுக்கும் தம்பி, மீசையை எடுத்து விட்டு தன்னுடைய முகத்தை தொப்பியால் மூடிக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைவார்.

அங்கே கதாநாயகி சிம்ரன் பயந்தபடி அமர்ந்து கொண்டு இருப்பார். அவருக்கு வருவது அண்ணா தம்பியா என்ற ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். பயந்தபடியே உட்கார்ந்து கொண்டிருப்பார்.

அப்பொழுது அஜித் தன்னுடைய முகத்தை தொப்பியால் மூடிக்கொண்டு அருகில் வந்து அமர்ந்து. டக்கென்று தொப்பியை தூக்கி ப்பே.. என்று பயம் காட்டுவார். அதன் பிறகு இது எப்படி இருக்கு..? என்று பேசுவார்.

அவர் பேசிய பிறகு தான் இது தன்னுடைய கணவர் என்று அறிந்து கொண்டு அவரை கட்டிப்பிடித்து அழுவார் கதாநாயகி சிம்ரன்.

இனிமேல் மீசையோடு வந்தால் அண்ணன். மீசை இல்லாமல் வந்தால் நான்.. உனக்கு எந்த பிரச்சனையும் இனிமேல் இல்லை சந்தோஷமா என்று கதாநாயகியிடம் இந்த விஷயத்தை கூறுவார்.

உடனே, வா.. அண்ணனிடம் இந்த விஷயத்தை கூறியே ஆக வேண்டும் என்று இருவரும் அண்ணன் அஜித்தை பார்க்க செல்வார்கள். அங்கேகாரில் ஏதோ பிரச்சனையை செய்து சரி செய்து கொண்டிருப்பார் அண்ணன் அஜித்.

அண்ணா என்று அழைப்பார் தம்பி அஜித். திரும்பி பார்த்தால் அண்ணன் அஜித்தும் மீசையை எடுத்திருப்பார். இந்த பிரச்சனையை சமாளிக்க தான் நான் மீசை எடுத்து விட்டேன் என்று சைகையிலேயே கூறுவார்.இப்படி இந்த முயற்சியில் தோல்வியில் முடிந்து விடும். இப்படி ஒரு காட்சி கதைப்படி இருந்தது.

ஆனால் நடிகர் அஜித் மீசையை எடுக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்ததால் இந்த காட்சியை படமாக்காமல் விட்டு விட்டார்கள் என்று பதிவு செய்திருக்கிறார் மறைந்த நடிகர் மாரிமுத்து.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …