நடிகர் மாரிமுத்துவின் மறைவு சினிமா மற்றும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஒரு நீங்காத வடுவை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
பல கால போராட்டத்திற்கு பிறகு தனக்கான அங்கீகாரம் கிடைத்துக் கொண்டிருந்த நேரத்தில் நேர்ந்த அவருடைய மரணம் ரசிகர்களை ரணமாக்கி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
இவருடைய மறைவை தொடர்ந்து அவருடைய இழப்பு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அவருடைய அன்றையாட வாழ்க்கையில் அதிகமாக இருந்த பலரும் தங்களுடைய கருத்தை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், மாரிமுத்து அவர்களின் கார் கிளீனர் மாரிமுத்து குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.
அன்று காலை 6:30 மணி வாக்கில் வந்தார். காரை தொடைங்க நான் நான் சீக்கிரமா கிளம்பனும் என்று கூறினார். சரி என்று நானும் வேக வேகமாக சென்று காரை துடைத்து கொடுத்தேன்.
உடனே காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார். கடந்த ஆறு மாதமாக அவருடைய காரை நான் தான் சுத்தம் செய்து வருகிறேன்.
ஒருமுறை காரை முழுமையாக சுத்தம் செய்த பிறகு என்னை அழைத்து நல்லா பண்ணியிருக்கப்பா என்று கூறினார். இதனை தொடர்ந்து நான் காரை சென்று பார்த்தேன்.
ஏன் சார்..? ஏதாவது நான் சரியா பண்ணலையா..? என்று சிறிது நேரம் கழித்து கேட்டேன். இல்லப்பா நிஜமாகவே நல்லா பண்ணி இருக்க அதைத்தான் சொன்னேன். நீ ஏதாவது தப்பா நினைச்சுக்கிட்டியா என்று சிரித்தபடியே கூறினார்.
காலையில் காரை துடைத்து அவரை அனுப்பி வைத்தேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் என்னுடைய ஓனர் அவர் இறந்துவிட்ட செய்தியை என்னிடம் கூறினார். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இதனை நான் எதிர்பார்க்கவே இல்லை என தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார் மாரிமுத்துவின் கார் கிளீனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.