நான்கு நாட்களுக்கு முன்பே மரண செய்தி தெரியும்.. – சீரியல் நடிகர் அர்ணவ் வெளியிட்ட பகீர் தகவல்..!

நடிகர் மாரிமுத்து இறப்பு குறித்து பல்வேறு துடிக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், பிரபல சீரியல் நடுவர் அர்ணவ் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறியதாவது, நான் என்னுடைய படப்பிடிப்பிலிருந்து அவர் டப்பிங் பேசிவிட்டு படபிடிப்பு வரவேண்டியவர்.

திடீரென என்னுடைய குழுவில் இருந்து என்னை தொடர்பு கொண்டு இப்படி மாரிமுத்து அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள் என்று கூறினார்கள். நான் சாதாரண நெஞ்சு வலியாக இருக்கும் ஏதும் பெரிதாக நடக்காது என்று எந்த மருத்துவமனை கூட விசாரிக்கவில்லை.

ஆனால் அடுத்த சில நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்து அவர் இறந்து விட்டார் என்ற தகவல் வந்த பிறகு ஷூட்டிங்-ஐ பேக்-அப் செய்து விட்டு அனைவரும் கிளம்பி விட்டனர்.

எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரு நிமிடம் என்னை சுற்றி என நடக்கிறது என்பதை மறந்துவிட்டேன்.

அந்த அளவுக்கு என்னுடன் நெருக்கமாக இருந்தவர் நடிகர் மாரிமுத்து. நான் இந்த செய்தியை என்னுடைய நண்பர்களுக்கு பகிர்ந்தேன். அவர்களிடம் கூறியது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

என்ன கூறினார்கள் என்றால், அவர் இறந்துவிட்டதாக நான்கு நாட்களுக்கு முன்பே மரண செய்தி தெரியும்.. இது ஒரு வதந்தி என்று என்னிடம் கூறினார்கள்.

எனக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டது. டே அவர் நிஜமாகவே இறந்து விட்டார். என்னுடைய டீமில் இருந்து தகவல் வந்தது என்று என்னுடைய நண்பர்களுக்கு கூறினேன்.

அதன் பிறகு அவர்களும் அதிர்ச்சியானார்கள். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பே இவர் இறந்து விட்டார் என்று வதந்தி பரவிய நிலையில்  தற்பொழுது நிஜமாகவே இறந்து விட்டார் என்று நினைக்கும் பொழுது என்னை சுற்றி என நடக்கிறது என்று தெரியாத ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது என பேசி இருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …